நயமிகுந்த நங்கை
உந்தன் உவகையை பெற நினைத்தே எந்தன் உவமை உடைந்துபோனது
உன்னுருவத்தை உற்றுநோக்கியே
என் உருவகம் உயிர் பெற்றது
உன் சினத்திடம் சரண் அடைய
என் முரணும் முடிவு செய்தது
ஏனோ என்று தெரியவில்லை..?
மோனை கூட உந்தன்
வீணை விரல்களால் மயங்கிவிட்டது எதுகை கூட உந்தன்
மதுகை பார்த்தே மடிந்துவிட்டது
நகைகளால் ஜொளிக்க நீ வெறும்
மங்கை அல்ல பெண்ணே..
நயங்களால் அலங்கரித்து நான் போற்றும் நங்கை கண்ணே...
நீ நயமிகுந்த நங்கை.....
-ஜாக்..