தன்னம்பிக்கை
எழுத்துக்கள் வார்த்தைகள் மிகவும் அழகு... அவைகளை கோர்த்து வரிசை படுத்தி பேசும் பிஞ்சு குழந்தைகள்.. மிகவும் அழகு.. தன் அம்மாவின் கருவறையில் கேட்கும் திறன் பெற்று ஒலி வழியாக கற்கிறது...
பிறந்தவுடன் தாயின் வாய் அசையும்
நோக்கி மொழி கற்று வார்த்தைகள் அறிகிறது....
சின்ன குழந்தை எத்துணை தன்னம்பிக்கை.. அத்துணை விஷயங்களை தானா கற்று வளர்கிறது... இருபத்தைந்து வயது
வந்த பிறகு என்ன? செய்ய போகிறோம்.. எதற்காக வாழ்கிறோம்.. எத்துணை கேள்விகள்... தற்கொலை, பொய்,படித்தல்,ஏமாற்றம்,பழி, நிறைய நிறைய விஷயங்கள் உதவி செய்யுங்கள் எதை கொண்டு இம்மண்ணில் இருந்து செல்ல போகிறோம்... இன்றைய நிலைமை இது தான்... பணம் பணம் அதை தாண்டி வாழுங்கள்.... சந்தோஷமாக
உன்னை நீ நேசி...குழந்தைகளாக மாறுங்கள்... வாழ்க்கையை வாழுங்கள்...... பயந்து பயந்து வாழ்வில் சில முக்கிய முடிவுகளை தவறாக எடுத்து வருத்த படாதீர்கள்.....