வள்ளுவன் போற்றிய ஒழுக்கம்

வள்ளுவன் -
வானகத்திலிருந்து வந்து
வியந்துரைத்தான் -

நான் கூறிய
நல்லொழுக்கத்தைப் பின்பற்றி
நீண்ட வரிசையில்
நீண்ட இடைவெளியில்
நாட்டில் மக்கள்யாவரும் நிற்கின்றாரே..?

பொதுவாக - இவர்கள்
பெருங்கூச்சலோடும்
ஒருவரை
ஒருவர்
தள்ளிக்கொண்டும்
திட்டிக்கொண்டும் தானே நிற்பர்...

எவர் உரைத்தார் - இவர்களுக்கு
என் குறளுக்கான தெளிவுரையை...?

திரு. மு. வரதராசனாரா...?
திரு. மு. கருணாநிதியா...?
திரு. சாலமன் பாப்பையா...?
இல்லையேல்
கோனார் உரையா..?
எனக்கு பதில் கூறுங்கள் -

எனது ஒழுக்கத்தின் பாடத்தையும்
எனது கடைசி நம்பிக்கையையும்
எல்லோரும் பின்பற்ற
எவர் காரணம் - மக்களே
எனக்கு பதில் கூறுங்கள்...????

சிறிதுநேரத்தில்...

பதில் வந்தது -

பெருநாவலரே - முதற்
பாவலரே...

திரு. மு. வரதராசனார் அவர்கள்
சொல்லியும் கேளாதோர்...
திரு. மு. கருணாநிதி அவர்கள்
சொல்லியும் கேளாதோர்...
திரு. சாலமன் பாப்பையா அவர்கள்
சொல்லியும் கேளாதோர்...
கோனார் உரையைக் கேட்டும்
கேளாதோர் - இன்று
கொரோனா வந்துரைக்க
கேட்டு - ஒழுக்கத்தைப் பின்பற்றி
கோட்டுக்குள்ளே நின்று
வள்ளுவன் வழியைப் பின்பற்றி -நோய்
வருமுன் காத்து நிற்கின்றனர்....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (5-Apr-20, 7:19 pm)
பார்வை : 125

மேலே