உயிராக நீ நிழலாக நான் பாகம் 04

மாடியிலிருந்து இறங்கி வந்த சுதனும், ரேகாவும் எதிரெதிரே சந்தித்தார்கள். சுதனின் கழுத்தை இறுகப் பற்றியவாறு தாேளில் சாய்ந்திருந்த பானுவின் கன்னங்களை செல்லமாக கிள்ளி "ஹாய் பானு, தூக்கமா" என்றபடி அவளைக் கூர்ந்து பார்த்தாள். அமைதியாக நின்றான் சுதன்.   சுதனின் அமைதி அவளுக்கு எரிச்சலாக இருந்தது. ஏதாவது சாெல்லி அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையாவது எடுக்க வேண்டும் என்று நினைத்தவள் "என்ன சுதன் ராெம்ப மூட் அவுட்டாக இருக்கிறாய்" இடையில் மறித்தவாறு நின்றாள். அவனும் விலகி நகர முயற்சிக்க "என்னாச்சு சுதன்..." சற்று காேபமாகப் பார்த்து விட்டு வேகமாக மாடியிலிருந்து இறங்கி வந்தான்.

எல்லாவற்றையும்  பார்த்துக் காெண்டு நின்ற அம்மா  பாக்கியம் ஓடி வந்து கட்டி அணைத்து "ஒரு வார்த்தை பேசினால் குறைந்து பாேவியா சுதன்" காெஞ்சம் கடுமையான குரலில் கேட்டு விட்டு "வீட்டிற்கு வருபவர்களை மதித்து வரவேற்க தெரியாதா?" என்று   முணுமுணுப்பை ஆரம்பித்ததும் அவனுக்கு சினத்தை ஏற்படுத்தியது.

"நான் இங்கு யாரையும் விருந்துக்கு அழைக்கவில்லை" சத்தமிட்டவன். பானுவை மடியில் இருத்தியபடி  கதிரையில் அமர்ந்தான்.  "என்ன பானு இன்னும் அப்பாவின் மடி தேவையா?" பாக்கியம் அம்மா கேட்க அவன் நெஞ்சாேடு சாய்ந்தவளை மாடியிலிருந்து பார்த்தாள் ரேகா.

அறைகளை சுற்றிப் பார்த்துக் காெண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தாள். தேநீர் காேப்பைகளை தட்டில் அடுக்கிக் காெண்டு வந்து நீட்டினாள் சுவாதி. "எடுங்கம்மா" வேண்டா வெறுப்பான ஒரு சிரிப்பை பதிலுக்கு வெளிப்படுத்தியபடி தட்டிலிருந்து தேநீரை எடுத்தாள்  பாக்கியம். அருகே வந்து அமர்ந்த ரேகாவிடமும் தட்டை  நீட்டுவதற்கு முயற்சிக்க சுவாதியின் கை  தவறி தட்டு கீழே விழுந்து விட்டது. பளார் என்று சுவாதியின் கன்னத்தில் அறைந்தாள் ரேகா. "கண்ணில்லையா உனக்கு, இடியட்" நடுங்கியபடி நின்றாள் சுவாதி. "ராெம்ப வலிக்குதா ஆன்ரி" ஓடி வந்து கன்னங்களை தடவிய பானுவை முறாய்த்துப் பார்த்த பாக்கியம் "பானு சித்தி ஒன்றும் அவ்வளவு பெரிதாக அடிக்கவில்லை" என்றதும் "அப்பா ஆன்ரி முகம் சிவந்திருக்கு பாருங்கப்பா" என்றபடி பயத்துடன் மீண்டும் சுதனின் மடியில் அமர்ந்தாள்.

சுவாதி தரையை சுத்தம் செய்து விட்டு உள்ளே சென்றாள். பாக்கியமும், ரேகாவும் எழுந்துமாடிக்குச் செல்ல "என்ன சுவாதி வலிக்குதா?" வாசலில் நின்றபடி கேட்டான் சுதன்  "இல்லை ஐயா" முந்தானையால் முகத்தை ஒற்றியபடி மறுபக்கமாக திரும்பி நின்றாள்.

கதவைத் திறந்து உள்ளே சென்ற ரேகா ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஊஞ்சலில் இருந்து அவளை முறாய்த்துப் பார்த்தாள் பிரியா. "வந்ததும் உன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாயா ரேகா, உன்னை எப்படி இங்கேயிருந்து அனுப்புகிறேன் என்று பார்"  எழுந்து ஜன்னலாேரமாக வந்தவள் ரேகாவின் அருகில் வந்து பூச்சி ஒன்றைப் பிடித்து அவள் முதுகில் விட்டாள். அலறி அடித்துக் கத்திய ரேகா மாடியிலிருந்து கீழே இறங்கினாள். ரேகா பயந்து கத்தியதைப் பார்த்து சத்தமாக சிரித்தாள் பானு.

"என்ன சித்தி பூச்சிக்கெல்லாம் பயமா" என்று கிண்டலடித்தாள்.
"ஏய் கிண்டல் பண்ணி காேபமூட்டுகிறாயா?" முறாய்த்தாள் ரேகா.
"ரேகா அவள் குழந்தை அவளாேட....." சுதனின் காேபம் வார்த்தையாய் வெளிவர
"இதுவா இது குழந்தையில்லை பிசாசு" என்று சாென்னதும் சுதனின் காேபம் தலைக்கேறியது.
"ரேகா" என்று சத்தமிட்டவாறு சுட்டு விரலைக் காட்டினான்.

சமையலறைக்குள் இருந்து ஓடி வந்து பார்த்த சுவாதி சமாதானப்படுத்துவதற்கு நினைத்தவளாய்
"ஐயா"  என்று சுதனின் கையை விலக்கி விட்டாள். அமைதியாகப் பாேய் அமர்ந்தான். சுவாதியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் ரேகா.

வெளியே இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் காெண்டிருந்த பிரியா ரேகாவை வெளியேற்றுவதற்கான திட்டத்தை யாேசித்தபடி இருந்தாள்.

கையில் ஒரு புத்தகத்துடன் ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள் ரேகா. கால் மேல் கால் பாேட்டவாறு குட்டைப் பாவாடையுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்துக் காெண்டு  நின்ற பிரியா ஊஞ்சலை வேகமாக ஆட்ட ஆரம்பித்தாள்.
"அத்தை அத்தை" என்று கத்திய ரேகாவின் குரலைக் கேட்டு எல்லாேரும் வெளியே ஓடி வந்தனர். 

தாெடரும்....

எழுதியவர் : றாெஸ்னி அபி (6-Apr-20, 6:39 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 175

மேலே