உண்மை சொருபம்

ஒரு மனிதன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான் .

நான் உலகிலேயே அதிக துயரமுடையவனாக இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் பிரார்த்திக்கிறேன்.

எனக்கு அதிகமாக ஒன்றும் வேண்டாம். என் துயரங்களை நீங்கள் யாரிடமாவது மாற்றிக் கொடுத்து அவருடையதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் மற்ற அனைவரும் மகிழ்வுடன் உள்ளனர்.

நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் என்று வேண்டினான்.

அன்றிரவு அவன் ஒரு கனவு கண்டான்
வானிலிருந்து இடி போன்ற குரல் ஒலித்தது .

அனைவரும் அவரவர் துயரங்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி விரைந்து வாருங்கள்.

தன் பிரார்த்தனைக்குக் கடவுள் காது கொடுத்துவிட்டார் என்று அவன் நினைத்தான்.

உடனே அவன் தன் துயரங்களை ஒரு பையில் நிறைத்துக்கொண்டு சாலையில் வந்தான் .

சாலையில் அவன் கையில் இருந்த பைதான் சிறியதாக இருந்தது .பலர் பெரிய பெரிய பைகளைத் தூக்கிச் சென்றனர்.

சிலர் பணியாட்களின் தலைகளில் சுமைகளாக வைத்துச் சுமந்து சென்றனர்.
அவனுக்கு வியப்பாக இருந்தது.

இறைவா இவர்கள்தான் இந்த அழகிய மனிதர்களா. இறைவன் ஏன் எனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது.

நான் என் சிறிய பையுடன் வீடு திரும்பி விட்டால் இறைவனுக்கு நன்றி கூறுவேன் என்று நினைத்தான்.

கோவிலில் மறுபடியும் அந்தக் குரல் ஒலித்தது எல்லோரும் அவரவர் பைகளை சுவரில் தொங்கவிடுங்கள்.

பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டு மணி அடிக்கப்படும், அதுவே அடையாளம்
இருளில் உங்களுக்கு வேண்டிய பையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வெளிச்சம் உள்ளபோதே உங்களுக்குத் தேவையான பையருகே நின்று கொண்டால் ,
இருட்டில் தவறவிட மாட்டீர்கள்.

பிரார்த்தனை புரிந்தவன் தனது பையை பிடித்திருந்தான்.

மற்றவர்களும் அவ்வாறே நின்றிருந்தனர். அவன் ஆச்சரியமடைந்தான் பக்கத்தில் நின்றவர்களிடம் கேட்டான் இவர்கள் ஏன் பைகளை கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார்க அவர்கள் சொன்னார்கள்:

நீ ஏன் வைத்துக் கொண்டிருக்கிறாயோ அதே காரணத்திற்காகத்தான் .

இப்போது நம் கவலைகளைப் பற்றி நமக்கு ஓரளவாவது தெரியும் ஆனால் மற்றவர்களது துயரங்கள் நமக்கு பரிச்சயம் இல்லாததும் அறியாததும் அல்லவா. இந்த வயதில் ஏன் ஒன்றுமில்லாததிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்

நம் பழைய நண்பர்களுடன் வாழ்வதே மேல் . விளக்கு அணைந்தது அவரவரும் தங்கள் பைகளுடன் கோவிலைவிட்டு மிகவும் ஆனந்தமுடன் ஓடினர்.

கடவுள் மிகவும் கருணையுள்ளவர் என்னை சகதியிலிருந்து காப்பாற்றியுள்ளார் மக்கள் எவ்வாறு துயரங்களை மறைத்துள்ளனர்.

பெரிய பைகளைச் சுமந்தவர்களை மகிழ்ச்சி மிக்கவர்கள் என நினைத்தேனே என்று அவன் நன்றியுடன் பிரார்த்தித்தான்
ஒருவரும் தங்கள் உண்மை சொருபத்தைக் காட்டுவதில்லை

எழுதியவர் : srk2581 (6-Apr-20, 2:45 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 192

மேலே