அந்த ஒரு நாள்

என் பள்ளி கால நண்பன் அவன்..
பெரிதாய் பேசியது இல்லை..
எங்கேயாவது சந்திக்க நேர்ந்தால் ஒரு சிறு புன்னகை..
ஆனால் அவனை நினைக்காத நாள் என்று ஒன்று இல்லை..
வருடங்கள் பல ஓடிய பிறகு ஒரு நாள்...

என் அலைபேசியின் குறுஞ்செய்தியில் அவன்...
இன்று உன்னை சந்திக்கலாமா என்று..
பார்த்த உடன் துளிர்த்த கணீர் துளிகள்
பதில் மொழி அனுப்பின எப்பொழுது என்று....

இன்று என்ற மறுமொழியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை...
சுற்றிக்கொண்டிருந்த பூமி நின்று நிதானமாய் நகர தொடங்கியது...

என்ன பரிசு பொருள் வாங்குவது என்று தேடி...
ஒன்று வாங்கினேன்...
நேரம் ஆனதும் ஒலித்தது என் அலைபேசி..
எங்கு நிற்கின்றாய் என்று...

அந்த கோவில் கடைகளின் அருகில் என்றேன்..
என்னை கடந்து சென்றது ஒரு கார்...
சற்று தொலைவில் சென்று நின்றது...

அதில் இருந்து ஒருவர் இறங்கி வந்தார்..
அருகில் நெருங்க நெருங்க என் கால்கள்
நடுங்க தொடங்கின..
ஹாய் எப்படி இருக்கின்றாய் என்று கேட்டபோது
மயக்கமே வந்து விட்டது...

சமாளித்து நான் நலம் நீ என்றேன் நலம் என்றான்..
நான் வாங்கிய பரிசை நீட்டினேன்..
எனக்கு என்றேன்? விழித்தான்...

உன்னை பார்ப்பேன் என்றே நான்
நெனைக்க வில்லை என்று கூறி
ஓரிரு துளி கண்ணீர் வடித்தான்
நொருங்கியே விட்டேன் நான்..

அருகில் இருந்த உணவகம் சென்றோம்..
என் அருகில் அவன் அமர்ந்தான்..
உடன் இருந்த அவன் நண்பர்கள்
சொல்லிவிடு சொல்லிவிடு என்கிறார்கள்
எதையும் காதில் வணங்காமல் நான் நின்றேன்

பிரியும் நேரம் வந்தது...
அவன் என சொல்ல போகிறான் என்று
ஆர்வமாய் இருந்தேன்...
நான் வாழும் நரகத்தில் உன்னை சேர்க்க விருப்பம் இல்லை
என்று நீட்டினான் அவன் திருமண அழைப்பிதழ்..

அன்று இருந்த என் வானம் இன்னும் விடிய வில்லை
இந்த வரிகள் மட்டும் தன என் சொந்தம்....

எழுதியவர் : naan (7-Apr-20, 7:13 pm)
சேர்த்தது : Kavitha
Tanglish : antha oru naal
பார்வை : 174

மேலே