சிங்கப்பெண்ணே சீறியெழு கவிஞர் இரா இரவி

சிங்கப்பெண்ணே சீறியெழு ! கவிஞர் இரா .இரவி !

தங்கத்திற்கு அடிமையாகாமல் இரு பெண்ணே
சிங்கப்பெண்ணே சாதிக்கப் பிறந்தவள் நீயே !

தொலைக்காட்சி தொடர்கள் பார்க்காதே பெண்ணே
தொலைத்தரும் காட்சிகள் உன் கண் முன்னே !

புராணப் புரட்டுகளை நம்பாதே பெண்ணே
புத்தியை பகுத்தறிய பயன்படுத்திடு பெண்ணே !

அடுப்படியிலேயே முடங்கி விடாதே பெண்ணே
அதையும் தாண்டி சாதிக்க வேண்டும் பெண்ணே !

தாழ்வு மனப்பான்மையை அகற்றிடு பெண்ணே
தன்னம்பிக்கை மனதில் பெற்றிடு  பெண்ணே !

கல்வியை கற்றிடத்  தயங்காதே பெண்ணே
கற்ற கல்வி கை கொடுக்கும் பெண்ணே !

உனக்குள்ள திறமையை அறிந்திடு பெண்ணே
ஒருமனதாக அதில் முயன்றிடு பெண்ணே !

சமைக்க மட்டும் பிறந்தவள் அல்ல பெண்ணே
சாதித்து வியக்க வைக்க பிறந்திட்ட பெண்ணே !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (8-Apr-20, 5:08 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 37

மேலே