விட்டு விடுதலை

விட்டு விடுதலை
---விடிந்து மலரட்டும்
வடியும் குருதியை
---வரமால் தடுக்கட்டும்
விவசாய நிலத்தின்
---வளமை பேணா
மண்ணுலகை முழுவதும்
---பசுமை தோன்ற
வலிக்கும் கோபத்திற்கு
---வழி பிறக்க
வலுவோடு வளைவைக்
---வழியில் காண
விடியலின் விதையை
---விதைத்து மகிழ
வன்மத்தை சற்றேனும்
---விரட்டி முடிக்க
விசுவாசமற்ற வார்த்தைகள்
----தேக்கம் கொள்ளாமல்
விழுந்து கொண்டுஇருக்கும்
---மகிழ்ச்சியை தூக்கவே
திறமுடனே கவனமாய்
---தன்னிலை அறியவே
விட்டு விடுதலை
---வித்தோடு மலரட்டும்
கவிச்சுடர் அகிலன் ராஜா

எழுதியவர் : கவிச்சுடர் அகிலன் ராஜா (8-Apr-20, 9:59 pm)
Tanglish : vittu viduthalai
பார்வை : 78

மேலே