அழுக்கு மூட்டை11

---------------
வாழ்க்கை சாலையில் பயணித்து போகையில்
அழுக்கு மூட்டை சுமந்த அணுக்கள் இரண்டு
என்னை தொட்டு அறையவே
அழாத மனமும் ஊசலாடி விழியை
உடைத்தே நிற்கிறதே

மூழ்கி மரணிக்கும்வரை முக்காடு போட்டு வந்தார்கள்
மூக்காய் சுவாசித்து சுகமாய் தொடந்தார்கள்
அடிமையில்லா வாழ்வுவாழத்தானே
உரிமை போராட்டம் அண்ணா தனித்தே பயணித்தால்
தடங்கல்கள் வந்துடுமென
நாங்களும் வந்து மூச்சாய் உழைப்போமென்றனர்
உடன் பயணித்தே உதவிப்பல செய்தார்கள்
பலமான நேரமதில் பலமாக இருந்து
பலத்தையும் இழக்க செய்து மகிழ்வு கொண்டனர்
விழுந்துவிடவே மருந்துயிட்டு விழா கொண்டனர்

அடிமை சத்திகள் சூழ்ந்துகொண்டு உரிமையின் கருவை
அலங்கோலம் செய்ய அறுந்து ஓடிகொண்டுஇருக்கிறதே இரத்தம்
அழுக்கு மூட்டையுடன் பயணித்தால்
உபத்திரம் உயர்ந்தே தன்மையையும் இழந்தோம்
T

எழுதியவர் : Akilan raja (7-May-20, 12:44 am)
பார்வை : 74

மேலே