இறகின் நீர்த்துளி

அண்டப் பெருவெளியை
அறிவியல் துணைக்கொண்டு
ஆளுவோம்

இறுமாந்து
கிடந்திருந்தது
மனித இதயம்

அணுக்களைப் பிளந்து
அடுத்தவரின் அச்சத்தில்
நான்
பாதுகாப்பாக இருப்பேன்

நம்பியிருந்தது
மனித
அகங்காரம்

உயிர்களிலெல்லாம்
நான் உயர்ந்தவன்
என்றெண்ணி
பிரிதுயரின் துயரம்
உணராமல்
கொன்று புசித்து
தின்று


ஆடிக்கொண்டிருந்தது
மனித ஆணவம்

இன்று
கண்ணுக்குத் தெரியாத
நுண்ணுயிரிடம்
தன்னைக் காத்துக்கொள்ள
ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறது

இயற்கையின் சமநிலை
குலைக்காமல்
உயிர்களோடு ஒன்றி வாழ்ந்தால்

சூரிய ஒளியில்
இறகிலிருந்து மறையும்
நீர்த்துளியாய்
ஞான ஒளியில்
உயிரிலிருந்து மறையும்
அகங்காரம்
மலரும் மனிதம்

எழுதியவர் : சூரிய காந்தி (8-Apr-20, 11:14 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 117

மேலே