கொரோனா பாடல்

வேல்டு பாப்புலேஷனுல இரண்டாவது இருக்கிறோம்
நூறு கோடி தாண்டி போயி ரோட்டுலயே படுக்குறோம்
கொரோனா வந்துருக்கான் தள்ளியே நில்லுங்க
மியூட்டேசன் ஆயிடுவான் சொல்லுறத கேளுங்க
சுத்தம் சுகாதாரம் இல்லனா, தூக்கினு போயிடுவான் கொரோனா
நோயை எதிர்க்கிற சக்தியை தினம் வளக்கணும்
இயற்கை கூட ஒன்றி வாழ நாம இனி பழகணும்
அரசு சொல்லுறத கேட்டுட்டா கொரோனா பரவல தடுக்கலாம்
வல்லரசு நாட்டை கூட கதற விட்டான் கொரோனா
கொஞ்சம் லூசு வுட்டா பரவிடுவான் கொரோனா
கண்ணுக்கு தெரியாத எதிரி
மாட்டிக்காம ஓடிடனும் செதிரி
இம்யூனிட்டி இருந்தாக்க வந்தாலும் ஓடிடுவான்
கம்யூனிட்டில இருந்தாக்க வச்சி நம்மள செஞ்சிடுவான்
ஜிகினா போல மின்ன மாட்டான்
யாரு கண்ணுக்கும் தெரிய மாட்டான்
அவன் பேரு கொரோனா பொறந்த இடம் சைனா
வேல்டு பாப்புலேஷனுல இரண்டாவது இருக்கிறோம்
நூறு கோடி தாண்டி போயி நோட்டில்லாம தவிக்கிறோம்
சிகிரெட்டு தண்ணிக்கு அடிமையா இருக்கிறான்
மேலும் கீழும் மூச்சி வாங்கி அப்புறமும் குடிக்கிறான்
தும்முனா இருமுனா வச்சிக்க கர்ச்சிப்ப
கூட்டத்துல போகாம வீட்டுலயே இருந்துக்க
BP சுகருக்கு மருந்து தொடர்ந்து சாப்பிட்டு
கொரோனா வந்துடுமோனு பயந்து பயந்து நடுங்கிட்டு
இப்பவோ அப்பவோன்னு பதுங்கி நாம இருக்கிறோம்
இயற்கையை மறந்துட்டு இப்ப செயற்க்கையா வாழுறோம்
லேசா நெனச்சுக்கிட்டு லேகியத்தை எடுக்காதா
அனாதை போனோமா போயிடுவ அத்த நீ மறக்காத
வல்லரசு நாடுங்களும் நடுங்குது
வளரும் நாடுங்களை நெருங்குது
வேல்டு பாப்புலேஷனுல இரண்டாவது இருக்கிறோம்
நூறு கோடி தாண்டி போயி வழியில்லாம தவிக்கிறோம்
டே நைட் பாக்காம டூட்டி பாக்கும் டாக்டரு
போலீசு, செவிலியரு எல்லாரையும் நெனச்சிரு
வீட்டுல இருந்துரு தனித்திரு விழித்திரு
நாட்டை காக்க வீட்டிலிருப்போம்
வீட்டை காக்க சுகாதாரம் ஆரோக்கியம் கடைபிடிப்போம்
கவிஞர் வி ர சதிஷ்குமரன் ch 64
கொரோனா விழிப்புணர்வு புத்தகம் ஆன்லைனில் படித்து
விழிப்புணர்வு பெற 7358185552 எண்ணுக்கு whats ஆப் செய்யவும்

எழுதியவர் : கவிஞர் வி ர சதிஷ்குமரன் ch 64 (9-Apr-20, 3:23 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 134

மேலே