அவள் அவன் வரவில்
வா என்னன்பு மகளே
இன்னும் வாராது
உன் மனதை நோகடிக்கும்
உந்தன் காதலனைத் தேடிடலாம் வா
வா நான் உனக்கு துணையாய்
ஒளி குடை விரித்து வருவேன்
பயம் ஏதுமில்லாமலே வந்திடலாமே நீ
மண்ணிலே உலவி வந்து
உன் மன்னனைத்தேட ...... என்றது
நிலவோடு நானும் புறப்பட்டேன்
தேடித்தேடி அலுப்படைந்து
ஒரு மரத்தடியில் அமர்ந்தேன்
அவ்வளவில் வெள்ளி முளைக்க
விடியலுமானது ..... நிலவும் மங்கியது ..... ஓய்ந்ததோ நிலவு !
என்னையும் நிலவையும் ஏமாற்றிய
என்னவனே நிலவுபோய் ஆதவனும்
குண திசையில் வந்துவிட்டான்
நீ ஏன் இன்னும் வரவில்லையோ
என் மனம் வாடுதே உன் வரவிற்கேங்கி
நிலவோடு அலைந்து உனைத்தேடி
ஓய்ந்தநான் இனி ரவியோடு சேர்ந்து
உனைத்தேட மாட்டேன் ...... நீயே
வந்து சேர்வாய் என்னன்பே நாம் இன்புற்றிருக்க