நிலைமை கவிதை-2017

ஒரே ஒரு வார்த்தை சொல்லு,இல்லையென்றால்,
அப்போலோ போல் கொல்லு...

காவிரி,கொள்ளிடம் போல்,
என் மனம் காலியானதே...

கர்நாடகம் நீர்ப்போல்,
உன் பார்வை,விட்டு அள்ளு...

அரசியல் செய்து,
என்னை அலைக்கழிக்காதே,அன்பே...

உன்னை பார்த்தவுடன்,
புதிய இந்தியா போல்,என்னுள் புதுக்காதல் பிறந்ததே...

அதனால் என்னவோ,
என் மணம்,
பணம் போல் புதிதானதே...

அதற்கு தான்,என்னை வங்கி வாசல் போல்,உன் மனவாசலில் நிற்க விட்டாயோ...

பணம் போல்,மண மாற்றச் சொல்லாதே...

முத்தம் ஒன்று நான் கேட்க,
சத்தமில்லாமல் GST போட்டுக் கொள்ளாதே,உயிரை அள்ளாதே...

மாட்டுக்கறியா தின்னேன்...
ஏன் தடை விதிக்கிறாய்,பெண்ணே...

நெடுவாசல் போராட்டம் போல்,நெடுநாளாய் உன்னை கெஞ்ச...

செவி சாய்க்காத,அரசுப்போல்,
நீயும் என்னை மிஞ்ச...

போதும்,போதும் புது இந்தியா...

போராட சக்தியில்லை என்னிடம்...

எழுதியவர் : கதா (10-Apr-20, 8:12 am)
சேர்த்தது : கதா
பார்வை : 84

மேலே