திருவேங்கடவனுக்கோர் மனு
கருணைக் கடலே கலியுக வரத
ஏழைப் பங்களா ஏழுமலை வாசா
எந்தையே வெங்கடேசா அன்று தாமரைத்
தடாகத்தில் முதலை வாயில் கட்டுண்ட
யானையின் ஆதிமூல என்ற குரல் கேட்டு
அக்கணமே புள்ளின்மேல் விரைந்து வந்து
முதலையின் பிடியிலிருந்து கரியை விடுவித்தாய்
இன்றோ உன்னை நினைத்து மனமுருகி
குரல் கொடுக்கும் எண்ணிலடங்கா மக்கள்
துதி உந்தன் செவிக்கு இன்னும் எட்டாததேனோ
மாலே கருமாணிக்கமே சோலைப்பொழில் சூழ்
வேங்கடவா இறங்கிடுவாய் எம்மேல் உந்தன்
சுதர்சன சக்கரத்தால் கொய்திடுவாய்
கண்ணிற்கு புலனாகா கொடிய இராக்கதன்
கொரோனாவை இன்னும் தாமதியாது வந்து
இப்பொன்னாளில் புத்தாண்டில் எமக்கு இதையே
நாம் கோரும் வரமாய் தந்திடு வாயே