குன்றா அழகு
குன்றா அழகென்று நீ கண்டது
யாதேனும் உண்டோ என்று அவன்.....
உண்டு உண்டு ஒன்றே அதுவே
குன்றுதோறும் குடி இருக்கும் எந்தன்
குறமகள் மணாளன் குமரன் அவனே
அழகென்னும் சொல்லுக்கு அவனே ஒருவன்
அவன் தந்த தமிழும் அவனைப்போல
குன்றா அழகு மொழி