தம்பி 👬

தம்பி எனும் தங்கத்துக்கு👬

உலகத்திற்கு வரும் முன்னே என் இதயத்தை கொள்ளை அடித்த கொள்ளையன்....👬

இவ்வுலகில் அவன் பிறந்ததும் எனக்கு அண்ணன் எனும் உரிமையை பதவி பிரமாணம் செய்து வைத்தான்...👬

அவன் முதலில் அண்ணா என்று கூப்பிட்டு சொல் அச்சியால் செதுக்கியது போல் இருந்தது...👬

ஆயிரம் தான் என்னை வெறுத்தாலும் அன்றாடும் என்னைப் பற்றிய புராணத்தைக் அவன் நண்பர்களிடம் பேசுவான்....👬

பக்கத்தில் இருக்கும்போது பகைவனைப் போல பார்ப்பேன் அவன் தொலை தூரம் சென்றபின் வேதனையில் உதிர்ந்து போவேன்...👬

அவன் காலப்போக்கில் நான் சொல்லும் வேலைகளை செய்யும் விநோத வேலைக்காரனாய் மாறினார்......👬

அவனை அழ வைக்கும் பார்க்கும் ஆனந்தத்தை கடவுள் எனக்கு மட்டும் ஒரு வரமாய் கொடுத்தார்....👬👬

எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் மூத்தவனாக அவதாரமெடுத்து முன்வந்து நிற்பான்...👬👬

என் படுக்கை அறையில் பங்குபோட வந்த பாசாங்கு பாசக்கார தம்பி அவன்...👬👬

என் சட்டையை ஏன் போட்டாய் என்று போர்க்களத்தில் சண்டைக்கு நிற்கும் என் சகுனி அவன்...👬👬

பாதியில் வந்து என்னுடன் சேர்ந்ததால் தானோ இவ்வளவு பாசமாக இருக்கிறான் என்மேல் என் உயிர் தோழன்...👬👬

எங்கள் குடும்பம் என்னும் ராஜ்யத்தில் அழகிய எஜமான் அவன் என் தம்பி...👬👬

சேட்டைகளை கல்வெட்டில் செதுக்கிய சேட்டைகளில் அரசன் அவன்.....👬👬

என் கவலைகளை கனவாய் மறைய வைப்பதில் இவன் ஒரு சூனியக்காரன்......👬

நம்முடைய அனுமதி இல்லாமல் நம்முடைய மனதை கொள்ளையடிக்கும் மந்திரவாதி இவன்...👬👬

ஆயிரம் பெயர் என் பின்னால் இருந்தாலும் என் மகன் எப்போதும் இருப்பது என் உடன்பிறப்பு மட்டுமே..👬👬

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அண்ணன் தம்பி போல வருமா...👬👬

டேய் தம்பி இது எல்லாம் கற்பனையே எதுவும் நிஜமல்ல போ போய் காபி எடுத்துட்டு வா...👬👬

என் உயிருக்கும் மேலான என் உண்மையான தம்பிகளுக்கு சமர்ப்பணம் 👬👬👬

எழுதியவர் : வினோத் குமார் (15-Apr-20, 4:38 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 127

மேலே