காதல்

சீவி முடித்த அடர்முடி
வட்ட வட்ட நிலா முகம்
நெற்றியில் குங்குமப் பொட்டு
நேர்த்தியான மூக்கு
அதில் சிவப்புக்கல் மூக்குத்தி
அழகிய கர்ணங்கள் அதில்
நீல ஒளிர் கக்கும் வைர தோடு
தேன் சிந்தும் செவ்விதழ்கள்
அதரம் மதுரம்
சற்று நீண்ட கழுத்து
அதில் தொங்கும் தங்க காசு மாலை
பூவன்ன தோளிரண்டு
மேலாடைப்பின்னே பொங்கும் இளமை
சீந்தில் கொடி இடை
தந்தத்தில் வடித்தெடுத்த கால்கள்
அதில் பூட்டிய வெள்ளி சலங்கை

இத்தனை அழகையும்
தன்னுள் ஒருங்கே அடக்கிய
கிராமத்து பைங்கிளி
கர்வம் சிறிதேனும் இல்லாது
அன்னம்போல் நடந்து வருகிறாள்
அவளே என் அத்தை மகள்
நாளை நான் மூன்று முடிச்சு சூடி
வதுவையாய் என் வீட்டிற்கு
புகும் இலக்குமியாய் கூட்டி செல்லப்போகின்றேன்

என் முகத்தில் ஓர் ஆணவம் கர்வம்
அவள் முகத்தில் நம்பிக்கை சாந்தம்
அதைக் கண்டு பொங்கும் ஆனந்தம்
என்னுள்ளத்தில் நாளையை நினைத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Apr-20, 3:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 118

மேலே