காதலர் -பலவிதம்

காதலித்தப் பெண்ணை பூவாய்
ஏந்தி அவள் ஒரு போதும் நோவாது
வாடாது வாழவைப்பவன் காதலில் உத்தமன்

காதலித்த கன்னியை பூவாய் நினைத்து
தான் வண்டாய் மாறி பூவின் தேனையே
அது இருக்கும் வரை அனுபவிக்க நினைப்பவன்
காதலில் மதியமன்

காதலிக்கும் பெண்ணை வெறும்
காமக்கிழத்தியாய் நினைத்து இருப்பவன்
காதலன் அல்லன் காமுகன் அவன்
காதலில் அதமன் பூவையை கசிக்கிடவே
துடிப்பவன் அவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Apr-20, 1:21 pm)
பார்வை : 77

மேலே