தன்னம்பிக்கையின் மறு பெயர்

கண் விழித்து,
காலைப்பொழுதை துவக்கி...
காளையை,ஒரு கையிலும்,
கதிரவனை,மறு கையிலும் எழுப்பி,
களத்தில் எருதை ஏற்றி...
ஏர் ல்,எருதை சாற்றி..
மண்ணில்,ஏர் ஐ ஊன்றி,
நடைபோடுவான்...
எழுப்பியது குற்றம் என்று,எதிரிப்போல்,
சுற்றி சுற்றி அடிப்பான்,உயர்ந்தவன்...
சலிக்காமல் வேலைப்பார்ப்பான்,சாணக்கியன்...
அடித்தவன் கை வலித்து,
அடங்கி விடுவான்,மண்ணுக்குள்...
விண் நீர்,விழும் என்று,
விதைகளை தூவுவான்,மண்ணில்...
கண்ணீர் வந்து,ஒழியுமே தவிர,
கரைய மாட்டான்,அந்த கருமேக சதிகாரன்...
தன்மானம் கொண்டவனல்லவா,
தன் வியர்வை நீரை வீசினான்,விதைகளுக்கு...
விதை முளைத்தது...
விண்ணோ,வாய் பிளந்தது...
கரூமேக காரன் கண்ணில்,கண்ணீர் கரைபுரண்டோடியது...
விதைகள்,விஸ்வரூபம் ஆனது,
அதைச்சுற்றி,வில்லன் படை நிலையானது...
களைவெட்டி,கையில் சாட்டையானது...
வில்லனை,வெளுத்தனுப்புவது திட்டமானது...
வியர்வை துளிகள்,வேரோடு நிற்கின்றது...
குருதி குழல்கள்,கொத்து கொத்தாக அசைகின்றது...
மொத்த வலிகள்,இசை தாளம் போடுகின்றது...
கனவுகள்,கண் முன்னே நிகழ்கின்றது...
இலட்சியம்,தன் கையில் சேரும்,அந்த நொடி...
அளவில்லா,மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்...
தன் உழைப்பு, உயிர் பெறும் நாள்...
அடிபட்ட நெஞ்சம்,ஆற்றும் நாள்...
தன்னையே உருக்கி,செதுக்கி இந்த மண்ணுக்கு கொடுத்தவன்...
கையில்,கதிர் அரிவாளை,ஏந்தினான்...
புன்னகைத்து,களத்தில் மய்யம் கொண்டான்...
களத்தில் கருதை,அறுத்தான்...
இவன் கழுத்தை,புயல் அறுத்தது...
எஞ்சியதையும்,
மிஞ்சியதையும்,
வீட்டில் சேர்த்தான்....
மீண்டு பிடித்தான்...

எழுதியவர் : கதா (16-Apr-20, 8:22 am)
சேர்த்தது : கதா
பார்வை : 98

மேலே