கப்பலேறிப் போய்விடு
கண்டம் விட்டுக் கண்டம் சென்று
காவு வாங்கும் நுண்மியே!
கண்ட துண்ட மாகக் கொத்திக்
கடலில் தூக்கி வீசுவேன்!
கண்டிப் பாகச் சொல்லி விட்டேன்
கட்டிப் போட்டுத் தீட்டுவேன்!
கண்ணில் பட்டி டாமல் நீயும்
கப்ப லேறிப் போய்விடு!
உப்புக் காற்றின் காட்டத் தில்நீ
உலர்ந்து காய்ந்து கருகிடு!
உப்பு நீரில் அரிப்பெ டுக்க
உருண்டு புரண்டு தொலைந்திடு!
உப்புத் தாளால் கிழியத் தேய்ப்பேன்
உதிரம் கொட்டும் ஓடிடு!
உப்புக் கண்டம் போட்டு விடுவேன்
உலகை விட்டே ஒழிந்திடு!!
சியாமளா ராஜசேகர்