நட்பும் காதலும்

எது நிரந்திரம் இப்பரந்த பூமியில்
கடல் வற்றி மலையாகிறது இமயம்
நேற்று வரை பாய்ந்த நதிகள்
சுவடு மட்டும் தெரிய காணாமல் போகும்
காடுகள் மறையலாம் இத்தனை ஏன்
வானின் சந்திர சூரியரும் இன்னும் தாரகைகள்
அழிந்து போகலாம் சுவதேதும் தெரியாது
தாவரங்கள் இன்னும் வாழும் உயிரினங்கள்
எல்லாம் மறைந்திடலாம் ஆனால்
நட்பும் காதலும் அழிவதே இல்லை
யுகங்கள் வந்து போனாலும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Apr-20, 7:05 pm)
Tanglish : natbum kaathalum
பார்வை : 52

மேலே