அவளுடைய கேள்வியும், அவன் பதிலும்🌹

அவளுடைய கேள்வியும், அவன் பதிலும்🌹

அவள் :- என் கண்கள்
அவன்:- கயில் விழிகள். துள்ளும் மீன்கள்.
அவள்:- என் பார்வை.
அவன்:- என் நெஞ்சை தைத்த காதல் அம்பு.
அவள்:- நான்.
அவன்:- நீ தேவதை கூட்டத்து தலைவி. பேரழகி.
அவள்:- என் கேசம்.
அவன்:- நிலவை தாலாட்டும் மேகம்.
அவள்:- இதழ்கள்.
அவன் :- தித்திக்கும் முக்கனி சுவையுடைய மது கிண்ணம்.
அவள்:- கண்ணம்.
அவன்:- பளபளக்கும் ஆப்பிள்.
அவள்:- என் முகம்.
அவன்:- முழு நிலவு
அவள்:- என் புருவம்.
அவன்:- சீதைக்கு பிடித்த இராமனின் வில்.
அவள்:- என் நெற்றி
அவன்:- பிரை நிலா
அவள்:- கழுத்து.
அவன்:- வெண் சங்கு
அவள்:- தோள்பட்டை
அவன்:- வளையும் மூங்கில் வகை.
அவள்:- விரல்கள்
அவன்:- தேன் குழல்
அவள்:- என்னுடைய இடை
அவன்:- இருக்கிறதா.. தேடுகிறேன். ஒரு வேளை காணல் நீரோ
அவள்: என்.....
அவன்:- நாகரீகம் கருதி வேண்டாமே
அவள்:- நீ என் காதலன். நாகரீகமாக சொல்லலாமே.
அவன்:- பெண்களின் பொக்கிஷம். தாய்மையின் அடையாளம்.
அவள்:- என் வடிவம்
அவன்:- பிரம்மனின் மாஸ்டர் பீஸ்.
அவள்:- காதல்
அவன்:- ஆண், பெண்ணின் மகோன்னதனமான உணர்வு. நீயும் நானும் செய்வது.
அவள்:- பொதுவாக.
அவன்:- மானுட உரிமை.
அவள்:- பெண்.
அவன்:- இவள் இல்லையேல், உலகம் இல்லையே.
அவள்:- ஆண்
அவன்: பெண்ணுக்கு அடிமை.
அவள்:- உண்மையாகவா.
அவன்:- நூறு சதவீதம்.
அவள்:- வாழ்க்கை.
அவன்:- இதுவரை கண்டுபிடிக்க முடியாத விடுகதை.
அவள்:- சிற்றின்பம்.
அவன்:- மானுட வாழ்க்கையில் ஒரு பகுதி.
அவள்:- தாய்.
அவன்:- அன்பின் பிறப்பிடம்.
அவள்:- தந்தை
அவன்:- குடும்ப தலைவர்.
அவள்:- நண்பன்
அவன்:- அதிசய உறவு. எதையும் எதிர் பாராத உறவு. தாயை விட ஒரு படி மேல்.
அவள்:- கடவுள்.
அவன்:- நான் இதுவரை கண்டதில்லை.
அவள்:- அன்பு
அவன்:- பிரபஞ்ச மொழி. உண்மையின் மறு வடிவம். உலகம் இயங்குவது அன்பினால் மட்டுமே.
அவள்:- ஆசை.
அவன்:- உன் மேல் எனக்கு கொள்ளை ஆசை.
அவள்:- பேராசை
அவன்:- என்னை பாராட்டி, இந்த நிமிடமே என்னை நீ கட்டிபிடித்து முத்தம் தர நான் நினைப்பது.
அவள்:- உன்னை...
அவன்:- என்னை...
அவள்:- என் ஆசை தீர
அவன்:- கட்டி பிடிக்க வேண்டுமா?
அவள்:- இல்லை. ஆசை தீர அடிக்க வேண்டும்.
அவன்: தென்றலே எங்கே உன் பலம் முழுவதும் என் மீது காண்பி. மலரே உன் என் கரம் உன் கரத்தை பற்றியவுடன் என்ன ஆனது உனக்கு. அன்பே உன் முகம் கிழ்வானம் போல் சிவந்து விட்டதே. இதோ என் இனோரு கரம் உன் இடை வளைத்து. அட , துவண்ட மலர் கொடி மோல் என் மார்பு மீது படர்ந்துவிட்டாய். பாவையே, ஏன் தீடிர் வெட்கம். என் முகத்தை நேராக பார், வண்ண மயிலே என்ன ஆனது உனக்கு. சுண்டி இழுக்கும் உன் காந்த கண்களால் , என் இதழ்கள் உன் இதழ் மீது பயணப்பட்டு, உன் இதழ் வரிகளில் பல கவிதை எழுத தயார் ஆகிறது. மங்கையே! என் இதயத்தில் நிரந்திர இடம் பிடத்த என் ஆசை காதலியே, இந்த அற்புத தருணம், இந்த சுகமான உன் அனைப்பு, என்னை உன் வாழ்நாள் அடிமை ஆக்கிவிட்டது.
- பாலு.

எழுதியவர் : பாலு (17-Apr-20, 6:04 pm)
சேர்த்தது : balu
பார்வை : 118

மேலே