கங்கையும் கூவமும்

கங்கையும் கூவமும்


பழையனக் கழிதலும் புதியனப்
புகுதலும் காலவகை யினானே.

வெண்பா

கைலையீச னைத்தொழுமுன் கங்கைநீ ராடலன்று
சைலநீரல் லக்கபாலிக் குக்கூவம் -- மயிலை
அநியாய கங்கை புனிதமிலாப் போக
சனியேநம் கூவம் நதி

நூறாண்டுகளுக்கு முன்னம் மக்கள் காசிக்குப்போய் இமய மலையில் இருந்து
பெருக்கெடுத்து ஓடி வரும் கங்கை நதியில் தலைமுழுகி ஈசனை வழிபடுவாரகள்.
அப்படிச் செய்ய அனைத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகமாம்.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னம் மலையிலிருந்து ஓடி வரும் நதியாக கூவநதி
இல்லாவிட்டாலும் அது மிகச் சுத்தமான நதியாக இருந்திருக்கிறது என்பதற்கு
நம் பக்தி மார்கத்தின் பல மகான்களும் பாடலாய் பாடி வைத்திருக்கின்றனர். ஆக
அன்றைய இராயபுரம் திருவல்லிக்கேணி மைலை அடையார் வாசிகளெல்லாம்
கூவம் ஆற்றில் குளித்து கபாலீஸ்வரைத் தொழுதுள்ளார்கள்.

பின்னரே கூவத்தில் குளிக்க முடியாப்போனது. ஆனால் இப்போது கங்கையில்
ஏராளமான கழிவுகளும் ஏன் பிணங்களும் அடித்துவரப் பட்டு கங்கையின் புனிதம்
மாசுபட்டு நாறுகிறதாம்.

இப்போது புரிகிறது சமண அடிகளாரான பவனந்தி ஏன் பழையன கழிய வேண்டும்
புதியன ஏன் புக வேண்டுமென்று சொன்னது எதற்கென்று.. எந்த புனிதத்தையும்
மனிதன் உபயோகப்படுத்தவிடாமல் கெடுத்து விடுவான். ஆகையால் புதிய கங்கை
ஒன்றைநாட வேண்டும் புதியகூவம் தேட வேண்டுமென்று சொன்னாரோ என்னவோத்
தெரியவில்லை.

இதை தவறாக புரிந்துகொண்ட மக்கள் எல்லா வற்றிர்கும் இது பொருந்தும் என்று
பழைய கடவுளர்களை விட்டோடி புதியக்கடவுள்களை தேர்வு செய்ததும் அல்லாது
அதை இந்து மதம் போல் செறிவு நிறைந்தது என்று வளர்ப்பது வேடிக்கையாக
உள்ளது.

பழைய இலக்கியங்களை ஓரிருவர் ஆங்காங்கே சிலதை மனனம்செய்து வயிற்றுப்
பிழைப்பு நடத்தி வருகிறார். பலரும் அதை அறவே மறந்தார். சிலர் எதையும் செய்து
புதுக்கவிதை புதீனம் என்று இலக்கிய வரலாற்றை ஆக்கிரமித்து நுழைத்துக்
கெடுத்தார்கள். எதுவாக இருந்தாலும் பழையதை வாழவிடுங்கள். அதைப் படியுங்கள். கலாச் சாரம் புரிந்து கொண்டு நடவுங்கள். தமிழர் என்று சொல்லுங்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (17-Apr-20, 3:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 435

மேலே