அவள் ஒரு அதிசயம்
பெண்ணே!
தூய்மையான தங்கம் போல்
நீயே இருக்கும்போது
கல்யாணி கவரிங் அணைந்து
உன்னை நீயே !
கேவலப்படுத்துகிறாய்...
காஞ்சிபுரம் பட்டுச் சேலை என்ன
கந்தல் சேலையை
கசக்கி நீ கட்டினால்கூட
அது காஞ்சி புறப்பட்டால்தான் ஜொலிக்கும்......
மலர் கண்காட்சிக்கு
போகிறேன் என்கிறாய்
பைத்தியக்கார பெண்ணே!
கண்காட்சியில் வைத்துள்ள
ஐந்தாயிரம் வகை மலர்களில்
ஐந்தாயிரத்து ஒன்றாக
உன்னையும்
சேர்த்துக் கொள்வார்கள்
போ போ...
வானத்தில்
வானவில் வந்திருப்பதை கண்டதும்
சின்ன குழந்தை மாதிரி
கைதட்டி மகிழ்கின்றார்
வளைந்து
நீ நிற்கின்ற போதே
நீயும் வானவில்தான்...
பனிக்கட்டி
உருகுவதை கண்ட
நீயும் உருகிறாய்...
அது
உன்னால்தான் உருகுகின்றது என்று
உனக்கெப்படித் தெரியும்....
மெத்தையில்
படுத்துக்கொண்ட
இலவம்பஞ்சு மென்மையின் தன்மையைக் கண்டு
பெருமைப்படாதே...
உன் வீட்டு
மிதியடியை போய் பார்
உன் பாதத்தில்
மென்மையை கண்ட
மெய்மறந்து கிடக்கின்றது..
எளிதில் கரையாத சோப்பு என்ற
விளம்பரம் செய்தனர்
நீ போட்டதும்
மின்னல் வேகத்தில் கரைந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
உன் பார்வை பட்டால்
இதயங்களை கரையும்போது
உன் மேனி பட்டா
சோப்பு எந்த மூலை..?
நீ
இடையில் இருக்கும்
செப்பு குடத்தை
நழுவுகிறது என்று
இறுக்கி இறுக்கி பிடிக்கிறாய்...
ஆனால்
தன்னை நீருடன் சுமப்பதால்
உன் மெல்லிய இடுப்பு
வலிக்குமே என்று
செப்பக்குடம்
நழுவி நழுவி போகின்றதோ...?
கவிதை ரசிகன்