கவிஞன் எழுதும் கார்முகில் கவிதை
மின்னல் விழி இவளுக்கு
--------மேனியெழில் சிவப்பில்லை !
தென்னைபோல் அசைகிறாள்
-------அன்னை சொல்லித் தந்த பாடமில்லை !
கன்னத்தில்;குழிவிருக்கும்
----------கற்பனை ஓவியனுக்கு வேலை கொடுக்கும் !
புன்னகையில் முல்லை சிரிக்கும் இவள்
--------கவிஞன் எழுதும் கார்முகில் கவிதை !