கொலைக் கொரானா
ஓகோக் கொலைகாரக் கொரானா நீயும்
உடனே ஓடிப்போ பாவி கொரானா
கூட்டல் பெருக்கலால் ஏற்றி எம்மை
கூட்டில் அடைத்தாய் கொடுங்கோல் பாவி
கூண்டாய் தூக்கிடக் கனவோ கண்டாய்
கொரில்லா போராம் மறைந்து தாக்கல்
கொரில்லாப் போரை தொடர்வோம் நாமும்
குலைப்பவர் காக்கார் விடுநீயும்
குலைநடுங்கும் கொரானாத் தடுக்க கொரில்லாவே
உலகை பிடிக்கும் ஆசை யிலன்று
நிலமகளை உலுக்கினான் இட்லர் வென்று
கொரானா தொண்டைக் குழியை நீயும்
ஒரேநாளில் அடைத்து குழியும் பறித்து
அலகில் இட்லரையும் மிஞ்சி நாயேநீ
குலுக்கி உயிரை எடுப்பதேன்
உலுக்கியது போதும் ஓடிப் போவாயே
அலகு = அளவுகோல்