அறிந்திடதான் ஆய்கிறாரோ

நவீன இந்தியாவின்
நாளைய சிற்பியிவர் !
நாட்டிற்கும் வீட்டிற்கும்
நல்லதொரு மாதிரியிவர் !

ஊரடங்கின் அவசியத்தை
உணர்ந்து செயல்படுபவர் !
காலத்தின் அருமையை
கவனத்தில் கொண்டவர் !

வாசிக்கும் எண்ணமதை
சுவாசிக்கும் மழலையிவர் !
வழக்கமதும் தொடர்ந்தால்
வளர்ந்திடும் மேதையிவர் !

அறிந்திடதான் ஆய்கிறாரோ
அமைதியாய் கைப்பேசியை !
அடக்கமுடன் அலசுகிறாரோ
அகிலத்தை ஆர்வமுடன் !

பழனி குமார்
23.04.2020

எழுதியவர் : பழனி குமார் (24-Apr-20, 7:36 am)
பார்வை : 523

மேலே