மௌனம்
மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்
நிலைமாறாத மனம் இருக்க
நீடிக்கும் மௌனம்
கவலைகள் அதிகம் இருக்கும்
நீடிக்கும் மௌனம்
மகிழ்ச்சியின் நிலையில்
நீடிக்கும் மௌனம்
கிடைக்கா பொருட்கள் மீது
மனம் ஏங்க நீடிக்கும் மௌனம்
தவறுகள் செய்ய நீடிக்கும்
மௌனம்
குழந்தைகள் கேள்விகளுக்கு
பதில் தெரியாமல் நீடிக்கும்
மௌனம்
மௌனம் தனிமையில் இருக்க
இறந்த காலத்தை நிகழ்காலமாய்
மாறி சரி செய்து பார்க்கும்.
மௌனமாய் இருங்கள்....
தவத்தின் நிலையில்
உன் மூச்சு காற்றை கவனிக்கும்
நிலையில்
புத்தகங்கள் படிக்கும் நிலையில்
புது சிந்தனைகள் படைக்கும் நிலையில்
ஆராய்ச்சி செய்யும் நிலையில்
கருவறையில் குழந்தை இருக்கும்
நிலையில்
எனக்கு தெரிந்த மௌனங்கள்,
என் மௌனம் கலையும்
உன் திருமணத்தில் வாழ்த்துக்கள்
சொல்லும் பொழுது...