வீணையடி நீ எனக்கு கண்ணம்மா
மீட்டா வீணையாய் காதல்,
என் இதயத்தில் உறங்கிக்கிடக்க
எங்கிருந்தோ வந்தாய் நீ
உன் ஒரே ஒரு பார்வையால்
தூங்கிக்கிடக்கும் என் இதய வீணையை மீட்டினாய்
சுருதி சேர்த்து ராகம் தந்து
காதல் கீதம் இசைத்து என்னுள்ளே
இன்பம் பெறுக .... முதல் முதலாய்
காதல் இன்பம் பருகி திளைத்தேன் நான்,
என்னை என்னுள்ளே உன்னோடு
என் இதய வீணையாய் இசைக்கும் வீணையாய்.
வீணையடி நீ எனக்கு கண்ணம்மா
கீதம் காதல் கீதம் இசைக்கும் வீணையடி
நீ எனக்கு