ஏழைகள் வாழ்வு ஒளிரட்டும்

ஏழைகள் வாழ்வு ஒளிரட்டும்
***************************
நிற்கின்ற மரங்களும்
அசைந்து விழவில்லை
பறக்கின்ற பறவைகளும்
பதுங்கி இருக்கவில்லை
தலைகனத்து மானிடர்கள்
கருத்தொருமித்தே அல்லல்படுத்த
கசங்கிய வாழ்வோடு
கடும் பசியோடு
கலங்கிய மனத்தோடு
கண்கள் அலைபாய
சற்றும் மனமின்றி
கதிரவனும் மறையா
காற்றும் வீசாமறுக்க
காத்திருக்கும் ஏழைகளின்
வறுமையும் பெருகுதே
சிதைகின்ற ஏழைகளின் வாழ்வுலும்
சிறுதொரு உதவி கிடைத்து
உதிர்ந்து போகாதவாழ்வு மலர்ந்து
ஏழைகள் வாழ்வும் ஒளிரட்டும்
அகிலன் ராஜா




--

எழுதியவர் : அகிலன் ராஜா (24-Apr-20, 11:42 pm)
பார்வை : 90

மேலே