கற்ற அறிவியல் தரவில்லை உற்ற மருந்து இன்னும்

தொற்று நோய்க்கிரு மியால்தினம்
இற்று வீழ்கிறது மனிதம்
கற்ற அறிவியல் தரவில்லை
உற்ற மருந்து இன்னும் !

புத்தியுள்ள சோம்பேறி யாய்முடங்க வைத்திட்டாய்
நித்தம் வழிபடும் ஆலயத்தின் வாசலையும்
மூடி முகமூடி யில்விலகிச் செல்லவைத்தாய்
எங்குதொலைத் தாய்கருணை யை ?

முறையே வஞ்சி விருத்தம்
இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-20, 10:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே