காக்கை

காக்கை

வெண்பா

காலை யெழுந்திருத்தல் காணாம லேபுணர்தல்
மாலை குளித்து மனைபுகுதல் -- சால
உற்றாரோ டுண்ண லுறவாட லிவ்வாறும்
கற்றாயோ காக்கை குணம்

(பழைய பாடல்)


அனைவரும் சண்டாளக் காக்கை என்பார்கள். ஆனால் காக்கையின் செய்கையிலிருந்து
மனிதன் கற்க வேண்டியது ஆறு நல்ல குணங்கள் என்று சான்றோர் சொல்கிறார்கள்
காக்கை 1. காலையில் எழுந்திடுமாம். 2. காணாப் புணர்ந்திடுமாம் 3. மாலையில் தவறா
குளித்தபின்தான் கூட்டிற்கு போகுமாம். 4.தன்இனத்தோடு சேர்ந்து உண்ணும் 5. தன்
இனத்தோடு சேர்ந்து உறவாவாடுமாம். மனிதர் அந்தகாலத்திலேயே இந்த ஆறு குணங்களில் மாறுபட்டு இருந்தமையால் புலவர் இப்பாட்டை பாடி அறிவுறுத்தியுள்ளார்.

எழுதியவர் : பழனிராஜன் (26-Apr-20, 10:19 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaakai
பார்வை : 381

மேலே