குடும்பத் தலைவர் தேர்வு

ஒரு முதியவருக்கு மூன்று மகன்கள்.. அவர் பெரும் செல்வந்தர். அவரது வயது முதிர்ச்சியின் காரணமாக குடும்பத் தலைவர் பொறுப்பிலிருந்து விலக விரும்பினார்..
ஒருநாள் தன் மகன்கள் மூவரையும அழைத்து, "என் அருமை மகன்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏழு தலைமுறைக்கு வேண்டிய சொத்தைச் சம்பாதிச்சு வச்சிருக்கேன். இதுவரைக்கும் நான் நம்ம கூட்டுக் குடும்பத்தின் தலைவரா இருந்து என் கடமையை யாரும் குறை சொல்ல முடியாதபடி வாழ்ந்திட்டேன். எனக்கு இனி ஓய்வு தேவை. நான் உங்க மூணு பேரையும் சமமாத்தான் நடத்தறேன். வித்தியாசம் காட்டறதில்லை. அதனாலே நீங்க மூணு பேரும் எனக்கு சத்தியம் பண்ணிக் குடுக்கணும். உங்கள்ல யாரை குடும்பத் தலைவரா தேர்ந்தெடுக்கிறோனோ அவனுக்கு மற்ற ரண்டு பேரும் உயிருள்ளவரை கட்டுபட்டு நடக்கணும். மீறி நடந்தால் எனது உழைப்பில் வந்த சொத்தில் உரிமை கொண்டாட முடியாது. சத்தியம் செய்யறீங்களா?".

மூன்று சகோதரர்களும் "நீங்க சொல்லறபடியே மூவரும் ஒற்றுமையா இருந்து குடும்பத் தலைவரை மதிச்சு அவர் சொல்படி நடப்போம். இது சத்தியம்" என்று கூறி அவரது தலையில் கைவத்தபின் தங்கள் தலைகளில் கைவைத்து சத்தியம் செய்தனர்.

" நல்வது எனதருமை மகன்களே. இப்ப உங்கள் மூன்றுபேரில் ஒருவனைத் தலைவராத் தேர்ந்தெடுக்கப் போறேன்..நீங்கள் ஒவ்வாருவராக ஆசி வாங்கவேண்டும். அதை வைத்து நான் நம் கூட்டுக் குடும்பத் தலைவரைத் தேர்ந்தெடுப்பேன்" என்றார் அந்த முதியவர்.

முதலில் மூத்த மகன் தன் தந்தைக்கு வணக்கம் சொல்லி குனிந்து அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.

நடுமகன் முதியவரைக் கும்பிட்டு மண்டியிட்டு குனிந்து அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.

கடைசி மகன் பெரியவர் நிற்கும் இடத்திலிருந்து ஐந்தடி தூரத்தில் தலைகுப்புறப் படுத்து தவழ்ந்துகொண்டே வந்து பெரியவரின் பாதங்களில் முத்தமிட்டு வணங்கினான்.

ஐந்து நிமிடம் அமைதி. பெரியவர் தன் முடிவை அறிவித்தார். "எனது அருமை மகன்களே. நீங்கள் எப்படி என்னிடம் ஆசி பெற்றீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். கடைசி மகன் கண்ணப்பன்தான் உங்கள் தாத்தாவிடம் ஆசி வாங்கினேனோ அதுபோல நடந்துகொண்டான். எனவே இந்த நொடியிலிருந்து கண்ணப்பனே நம் கூட்டுக் குடும்பத்தின் தலைவர்"என்று அறிவித்தார்.

எழுதியவர் : மலர் (28-Apr-20, 5:36 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 70

மேலே