பல்லா
ஏன்டா பக்கத்தூட்டு ஒறவுக்காரத் தம்பி,....
@@@@@@
என்னங்க பாட்டிம்மா?
உம் பையன் பேரு என்ன?
@@@@@@
அவம் பேரு பல்லா (Balla = bald headed, Rounded like a ball).
@@@@@
நீ பெத்த உம் பையனுக்கு பல்லான்னா பேரு வைக்கிறது. எங்க கெராமத்தில பல்லு எடுப்ப இருக்கிற பசங்களை அந்தக் காலத்தில பல்லன்னு அவன் இல்லாத போது பட்டப்பேரு வச்சு கிண்டல் பண்ணுவாங்க.
@@@@@@
நீ எதுக்கு உம் பையனுக்கு பல்லான்னு பேரு வச்ச? அவம் பல்லு வேற தூக்கிட்டு வாயைக்கூட சரியா மூடமுடியாம தவிக்கிறான்.
@@@@@@@@
பாட்டிம்மா எம் பையனுக்கு பத்து வயசுதான் ஆகுது. இன்னும் அஞ்சு வருசம் போனா பல் மருத்துவர்கிட்ட காட்டுனா கம்பி கட்டி பல்லு வாயிக்கு அடக்கமா வளர்ற மாதிரி சரி பண்ணிருவாரு.
@@@@@@@
அது சரி. பையனுக்கு பல்லான்னு ஏம் பேரு வச்ச?
@@@@@@@@
ஒரு பெரிய அதிகாரி பேரு 'பல்லா'ன்னு ஆரம்பிச்சு அவரோட குடும்பப் பேரோட முடியும். அவுரு மாதிரி எம் பையனும் பெரிய அதிகாரியா வரணுங்கிற ஆசையில அவனுக்கு அந்தப் பேரை வச்சேன். அது இந்திப் பேருதானே. உங்க கிராமத்தில ஒருத்தர் பெருகூட தமிழ்ப் பேரா இல்லை. நான் பட்டணத்துக்காரன். புதுமையான பேரைத்தானே வச்சிருக்கிறேன்.
@@@@@@
அப்ப சரி தம்பி. அந்தப் பேருக்கு என்ன தம்பி அர்த்தம்?
@@@@@@
அர்த்தம் பாத்து பேரு வைக்கிற காலம் முடிஞ்சு போச்சு பாட்டிம்மா. அர்த்தம் தெரியாம வேற மொழிப் பேருங்கள வைக்கிறதுதான் நம்ம தமிழரின் தற்கால நாகரிகம்.
@@@@@##
நீ சொல்லறதும் சரிதான் தம்பி.
■■◆◆◆■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Balla --- Scottish, English, Hungarian, German, Indian origin. இந்தப் பெயரை ஆங்கில நாளிதழ் ஒன்றில் கண்டேன்.

