பொண்ண பெத்த அப்பன்

அன்று காலை ஐந்து மணி, பசுபதியின் காதருகே இருந்த கடிகாரம் கீ…. கீ என அடிக்க, அதை நிறுத்தி விட்டு கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைக்கிறான். அப்போது அவன் மனைவியின் குரல்...

“எங்க… இன்னகி நம்ப தேவியை பொண்ணுப்பாக சூரம்பட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டு காரங்க வரங்களாம்… நேத்து நம்ப தரகர் வந்து சொல்லிட்டு போனாரு…

“ஏன்டி, நேத்து இரவே சொல்லி இருக்கலாம்ல” என்று அவன் கூற, அவளோ” இல்ல நேத்து நீங்க ரொம்ப சோர்வா இருந்திங்க, அதான் காலைல சொல்லிக்கலாம்னு விட்டுட்டன்” என்றாள்

இதுவரை பத்து மாப்பிள்ளை மேல பாத்தாச்சு… பத்தோட பதிநொன்ன இது இருக்க கூடாது னு சொல்லிகொண்டே அவன் பாயை மடித்து ஓரமாக வைத்தான்.

“சரி நா பல்லு வளக்கிட்டு வரன், காப்பி போட்டு வை “ என்று வேப்பங்குச்சியை உடைத்து பல்வளக்க ஆரம்பித்தான்.

“ ஏங்க” என்று மனைவி குரல்… என்னடி…. “ எங்க காப்பீ பவுடர் தீந்து போச்சுங்க கொஞ்சம் வாங்கிட்டு வரிங்களா” என்றாள்.

“ போன வாரம் தான டி வாங்கிட்டு வந்தன், அதுக்குல்லவா தீந்துபோச்சு” என்று கூற, அவளோ” போன வாரமே, பத்து கிராம் தான் வாங்கி கொடுத்தீங்க, கேட்டப்போ காசு இல்ல அடுத்த வாரம் வாங்கிதறனு சொல்லிட்டு இப்போ இப்படி கேக்குறீங்க” என்று கத்தினாள.

“சரி சரி வாங்கிட்டு வரன்” என்று கூறி தனது மேல்சட்டையை அணிந்தான்.சட்டைபையில் எவ்வளோவோ பணம் இருக்குயென்று பார்த்தான்…. ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. அதுவும் நேத்து பீடி வாங்க பத்து ரூபாய் கொடுத்ததில் கடைக்காரன் கொடுத்த மீதி காசு.

“ ஏண்டி.. மிளகாய் டப்பா ல இருக்க அந்த நூறு ரூபாய கொண்டு வா என்று அவன் கூற “ அவளோ “ நேத்து அந்த காசுல கரண்ட் பில்ல கட்டிடன்” என்று விருப்பு வெறுப்பாக கூறினாள்.

ஏற்கனவே அண்ணாச்சி கடையில ஐநூறு ரூபாய் கடன் பாக்கி.. இன்னைக்கி என்ன சொல்ல போறாரோ என்று பொளம்பி கொண்டே தனது செருப்பை போட்டுக்கொண்டு கடைக்கு கிளம்பினான்

“ எங்க அப்படியே இனிப்பு காரம் எதாச்சு வாங்கிட்டு வாங்க” என்று அவன் மனைவி கூற அவனோ “ சரி” என்று கூறி புறப்பட்டான்.

“எப்பா பசுபதி.. எப்படி இருக்க, பாத்து ரொம்ப நாள் ஆச்சு” என்று அவனுடைய சொந்தக்காரன் ஒருவன் அவனை தேர்வில் பார்த்து பேசினான்.” என்ன ப நம்ப தேவிக்கு மாப்பிள்ள பாத்தாச்சா என்று கேட்க அவனோ “ ஆ இன்னக்கி மாப்பிள்ள பாக்க வராங்க” என்று கூறினான். “பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணுபா.. வயசு பொண்ண எவ்ளோ நாள் வீட்டுல வெச்சிப்ப என்று கூறிக்கொண்டே புறப்பட்டான்.

அண்ணாச்சி” ஒரு காப்பீ தூள், அப்பறம் ஒரு இனிப்பு பொட்டலம் கொடுங்க” என்றான். “என்னப்பா பசுபதி “ உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்தாச்சா .. சீக்கிரம் கல்யாணத்த பண்ணிவைப்பா, வயசுபொண்ண எவ் வோலோ நாள் வீட்டுல வேசிப்ப” என்று கூறினார்.

அவனுக்கோ மனதில் “ ஒரு பொண்ண பெத்துட்டு நா படும் பாடு இருக்கே..”. சரி அண்ணாச்சி பழைய கணக்கு அப்பறம் இன்னக்கி கணக்கு சேத்து நாளைக்கு கொடுத்துறன் என்று கூறி அங்கிருந்து வீட்டுக்கு சென்றான்.

காலை 10.00…..

ஏண்டி மாப்புள்ள விட்டுக்கறாங்க வந்துட்டாங்க பாரு.. என்று தனது மனைவியை அழைத்தான் பசுபதி. அந்த மாப்பிள்ளையின் தாய் தராகரிடம் “ என்ன யா பெரிய இடம்னு சொன்ன எதோ பழைய வீட்டுக்கு. கூட்டுவந்துருக்க” என்றாள். அவனோ” பொண்ணுக்கு நிறைய சொத்து இருக்கு நீங்க கவலைபடாதீங்க” என்றான்.

மாப்பிள்ளை தமிழ் பட நாயகன் போல நல்ல அழகாக இருந்தான். பசுபதிக்கோ எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடிக்க வேண்டுமென்று ஒரு ஏக்கம்.

“ விஜயா போய் தேவியை கூட்டிட்டு வா…” என்றான் பசுபதி. தேவி தன் தலையை குனிந்தவாரு மாப்பிள்ளையின் முகத்தை எதார்த்தமாக பார்த்தாள்.
“ எங்களுக்கு பொண்ண ரொம்ப புடிச்சியி ருக்கு, பொண்ணக்கு என்ன போடறீங்க என்று மகனின் தாய் கேட்டார். நீங்க எவ்ளோ சொல்றிங்களோ அப்படி கொடுத்துறோம் என்றான் பசுபதி. பையனுக்கு ஒரு கார் அப்பறம் பொண்ணுக்கு ஐம்பது பவுன் நகை இது போதும் என்று பெருமிதமாக இருப்பது போல் கூறினாள் மகனின் தாய்.

சரி பண்ணிடலாம் என்று தனது மகளின் சந்தோசத்திற்காக திருமணத்தை பேசி முடித்தான் பசுபதி.

இனிமேல் யாரும் அவனை உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலையானு கேக்கமாட்டாங்க… ஆனா அடிக்கடி கடனை எப்ப கொடுப்பனு கேப்பாங்க …...

எழுதியவர் : ஆகாஷ் (30-Apr-20, 12:18 pm)
சேர்த்தது : ஆகாஷ்
Tanglish : ponna peththa appan
பார்வை : 99

மேலே