உண்மையில் காதல்
காதல் உண்மை
நான் இங்கு சொல்வது சிலருக்குப் பிடிக்காதுபோனாலும் நான் சொல்வதில் முக்காலும்
உண்மை. ஆகையால் பொருத்தருள்வீர் கவிஞசர்களே.
நல்லதோர் வீணைசெய்யான் பொல்லா முகாரியாலேன்
கொல்கிறார்நண் பர்கு விளக்கு
காதல்தே னாறுமாறும் கண்ணீராய் பாட்டிலில்லை
காதல்தேன் கண்ணீர் இரண்டும்
உன்காதல் உன்னதம தைத்தம்பட் டம்செய்ய
உன்ஆள் வெறுப்ப துறுதி
ஆளைப் பிடிக்கறியான் ஆயிரம் பாட்டெழுதி
ஆவது என்ன துரை
காதலில் உண்மையாய் மூழ்க கவிதையில்
காதல்போ தையைக் கொடு
இத்தளத்தில் காதல் அரைலட்சம் இத்தனையில்
எத்தனைப் புற்றுத் தேனாம்
தென்றல்பூங் காற்றுகொடி செவ்விதழ் யென்றுதினம்
புண்படுத் தாதுயிர் ஊட்டு
அரைத்தமாவை மீண்டும் அரைப்போமா தாடி
சிரைத்தவுடன் மீண்டுமேன்சி ரைப்பு
காதல் பலஜாலம் சூழலுக்கு பாதிப்பாய்
காட்டிடும்பச் சோந்தி யது
காதல்பாட் டில்யேன் சதமுனக்கு போதுமே
மாதமோர்நற் காதல் புனைவும்
பலதமிழர் பாட்டுசெய்ய வைத்தார் கடவுள்,
பலவாய் முருகைநீப்போற் றும்
பாபநாசம் சிவன் ( பழைய சினிமாக் காதல் பாடல்)
1. சிற்பி செதுக்காத பொற்சிலையே
எந்தன் சித்தத்தைநீ அறியாயோ
2. காதல் வாழ்வில் நானே
கனியாத காயாகிப் போனேன்
உடுமலை நாராயண கவி
1 சிந்தை நோயும் தீருமா --- (என்சிந்தை)
தீயன் சூழ்ச்சி மாறுமா
சிநேகம் ஒன்று சேருமா
2. அன்பேயென் ஆருயிரே அங்குநிற்ப தேனோ
யாருமிலா வேளையிலே இந்தவெட்கம் யேனோ
இன்பமாம் ராஜபோகம் ஏழைக்கேது சுவாமி
இருவர்நா முமுறவுகொண் டாலேற்குமா இப்பூமி
3. தேன்உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தைந்து
பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லு
வீனையின்ப நாதம் விளைந்திடும் விநோதம்
(இந்த தேன் உண்ணும் வண்டு என்ற பாடல் ஒரு இலக்கியத்தின் காப்பியாகும்
இருப்பினும் அழகாக மாற்றி அமத்துள்ளார் . பரவாயில்லை பாராட்டுவோம்
இந்தப் பாடல்கள் இலக்கணம் தவறா திருக்கும் ஒன்றிரண்டில் மாற்றி யமைத்
திருப்பார் மியூசிக் டைரக்டர். அவ்வளவுதான் . பாட்டுக்கள் அத்தனையும் பாராட்டுப்
பெற்றதாகும்)
அ. மருதகாசி.
நீவரவில் லைஎனில் ஆதர வேதுவாடி யதுளசி வாடாமல் வாழ்ந்திடநீர்
நீவரவில் லைஎனில் நிலவின் குளுமையும் இனிமையெல் லாம்யேது
இத்தளத்தில் ஐம்பத்திரண்டாயிரம் காதல் கவிதைகள் புனைந்துள்ளார்கள், சிவற்றைத்தவிர
அநேகரும் பத்திருபது அலங்கார சொல்லையே திரும்பத்திரும்ப உபயோகித்து கவிபுனைந்
திருக்கிறார்கள். கம்பன் இராமாயணத்தில் சரித்திரத்தையேக் காவியமாக்கினான்..ஆயிரக்
கணக்கில் இராமாயணத திற்கு பாட்டெழுதியவர் காதலுக்கு நூறு பாட்டிற்கு மேல் எழுதவில்லை
ராமன் சீதையைதவிற குகனைக் காதலித்தான் அனுமனைக் காதலித்தான் விபீடனை க்
காதலித்தான் சுக்ரீவனை க்காதலித்தான். காதலில் பெண்மட்டும் சம்மத்தப்பட்டிருக்கவில்லை
அடியார்கள் ஆண்டவனையேக் காதலால் சசிந்துருகி என்று பாடி யிருக்கிறார்கள். சிலர்
தங்கள் பெட் மிருகங்களின் மேல் உயிரைவைத்து காதலிக்கிறார்கள். இது உண்மை.
காதல் பாட்டில் உண்மை சம்பவங்கள் இணையவெண்டும். அப்போது தான் அது சோபிக்கும்.
துரமோ மகிழ்ச்சியோ,, வெற்றியோ, தோல்வியோ ஏதாகிலும் உண்மை சேர்ந்திருக்க
நன்றாக அமையும். ஆதலால்தான் சினிமாக் கவிஞ்சருக்கு சிச்சுவேஷனை விளக்குகிறார்கள்.
இலக்கியகளில் பல லட்சக்கணக்கான பாடல்கள் உள்ளது. அதில் சில காமுகர்கள்
இருக்கின்ற நூறு அல்லது இருநூறு காதல் பாட்டுக்களையே திரும்ப திரும்பத் சொல்லி
அதுவே இலக்கியம் காதல் தலைவன் தலைவி என்று மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
சீவக சிந்தாமணியில் மிருக குணங்களையும் அதற்கு வைத்தியமும் எனப் பலவிஷயங்களை
விளக்கியிருக்கிறார். வருணனை கள் மலை ,காடு, வீடு, கழனி, படை, கம்பீரம்
சேனை திறமை முதலிய அடிப்படை உண்மைகளை இலக்கியமாக்கியுள்ளார்கள்
இந்த பிரபஞ்சத்தில் கடவுள் அனைத்தையும் படைத்தார். திருமூலர் ஆண்டவனை நேரில்
கண்டவ ரென்பர் மற்ற சித்தர்கள். திருமூலர் சொல்கிறார் சிவனுக்கு பொன் செஞ்சடை
தவனவாசமுள்ள பொன்னாலான செஞ்சடையோன் என்கிறார். இன்னொரு புலவன்
கவிதை காவியம் திருவிளையாடற் புராணத்தில் ஈசனின் இடபக்கத்தி லமர்ந்துள்ள
உமைய வளின் கூந்தலுக்கு இயற்கையில் மனமில்லை என்று சிவனிடமே வாது
செய்வதாக புராணம் கூறுகிறது. இவையெல்லாம் புலவர்களின் கற்பனா சக்தியை
காட்டுகிறது. சிவனையே எதிர்த்து சடைகொண்டு வெருட்டல் வேண்டாம் நெற்றிக்
கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே என்று நக்கீரர் வீரமாக முழங்குகிறார்.
ஆக காதலை மட்டுமே எழுதுவது உண்மையில் அருவருப்பாக உள்ளது. அப்படி எழுதினால்
விதவிதமாக புதுமையாக எழுதுங்கள். ஒன்றே ஒன்றாக இருப்பினும் அது நன்றாய்
பலரும் பாராட்ட எழுதுங்கள். அல்லது இலக்கியத்தில் உள்ள அத்தனையும் அலசிப்
பேசுங்கள். தமிழ் இலக்கிய த்தில் காதல் என்பது 0.001% கூட இல்லை. அதையே பிடித்து
தொங்காதீர் தமிழர்களே. உண்மை இலக்கியங்களை படியுங்கள் பகிருங்கள்
பிழைகளாக தெரிந்தால் பொருத்தருள்வீர் தமிழ் அன்பர்களே. நன்றி. வணக்கம்.