துதி

அன்று பாரதப்போரில் பாஞ்ச ஜனியம் ஊதி
கௌரவர் படையை நிலைகுலைய வைத்தாய்க்
கண்ணா பின்பு கம்பம் பிளந்து வெளிவந்தாய்
நரஹரியாய் இரணியன் மார்பைக் கிழித்தாய்
கூறிய நகங்கொண்டு அவன் மாய்ந்திடவே
இன்று உன் நாமங்கள் பலவற்றால் துதிக்கும்
எம்மை விரைந்துவந்து காத்திடுவாய் என்னப்பா
என் இருடீகேசா இந்த கொடியோன்
கொரானாவின் உயிர்ப்பிடிப்பில் இருந்து
உன்நாமத்தின் மகிமை அதுவே என்று
முற்றுமுணர்ந்த முனிவர் கூறுவரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Apr-20, 3:24 pm)
Tanglish : thuthi
பார்வை : 52

மேலே