ஏமாற்றம்

என்னழகில் மெத்த மயங்கி பேரழகி
உன்னைவிட அழகியும் உண்டோ இவ்வவனியில்
என்றெல்லாம் கூறி என்னை மயக்கி
என்னை நுகர்ந்த நீ ஏனோ
காலத்தின் போக்கால் என்னழகு குன்ற
என்னை மெல்ல வெறுத்து இப்போது
முற்றிலும் காணாது போனாய் மலரின்
தேனெல்லாம் உறிஞ்சியபின் மலரை
விட்டுச்சென்ற வண்டு போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Apr-20, 3:36 pm)
Tanglish : yematram
பார்வை : 88

மேலே