மே தினம்🤝

மே தினம்.🤝

இந்த உலகை ஆண்டவன் படைத்தான்.
படைத்த உலகத்தை பவித்தரமாக்கியது மனிதன் தானே.

அந்த மனிதன் தொழிலாளி என்ற பெயர் கொண்ட சுறுசுறுப்பு சிகரம் தானே.

தொழிலாளி இல்லையேல் முதலாளி ஏது.

எண்ணங்கள் ஆயிரம் உருவாகலாம்
ஆனால் அதை ஆக்கபூர்வமாக ஆக்குவது செயல் தானே
செயல் வடிவம் தருவது வியர்வையை ரத்தமாக சிந்தும் உழைப்பாளி தானே.

வானுயர்ந்த கட்டிடங்கள்
வியக்கும் வைக்கும் பாலங்கள்
அண்ணார்ந்து பார்த்து கையெடுத்து கும்மிடும் கோயில் கோபுரங்கள்
இப்படி மனிதன் வியாபிக்கும் யாவும் உழைப்பாளியின் கைவண்ணம் தானே.

உங்கள் குழந்தைகளை தினம் பத்திரமாக பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர்க்கு ஒரு வணக்கம் சொல்லுவோம்.

இக்கட்டான சந்துகளிலும் சாமர்த்தியமாக ரிக்சா ஓட்டி வயதான பயனிகளை பத்திரமாக வீடு சேர்க்கும் ரிக்சா ஒட்டுபவருக்கு ஒரு நன்றியாவது கூறுங்கள்.

மனிதன் மலத்தை மனிதனே அல்லும் அவலம் இன்னும் அறிங்கேறத்தானே செய்கிறது.
இந்த நல்லதொரு நாளில்
அந்த மலம் அல்லும் தெய்வங்களை
தேடித்தேடி சென்று கை குலுக்குவோம்,பாராட்டுவோம்
அவர் கால்களில் இன்று ஒரு நாளாவது விழுந்து ஆசீர்வாதம் பெறுவோம்
நிச்சயம் பிறவி பயன் அடைவோம்.
உழைக்கும் தோழர் அனைவருக்கும் அன்பு மே தின வாழ்த்துக்கள்.
- பாலு.

எழுதியவர் : பாலு (30-Apr-20, 10:11 pm)
சேர்த்தது : balu
பார்வை : 120

மேலே