நெஞ்சம் தொடும் காதல் கவிதை

💙💚💜♥🖤💜🧡❤💚💙💜

*காதல் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

❤🧡💛💚💙💜🖤💓💗💗

💞 எங்கள் காதலை
எந்தச் சாதியாலும்
எந்த மதத்தாலும்
எந்த சட்டத்தாலும்
எந்த மனிதர்களாலும்
பிரிக்கவே முடியாது....
நாங்கள்
காதலர்களாக💘
வாழ்கிறோம்
"கல்லறையில்...."

💝 மனைவியின்
நிஜத்தோடு
வாழ்கின்றவர்களில்
பலர்....
காதலியின்
"நிழலோடும்"
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றனர்....💕

💟 பெண்ணே!
கண்ணில்
சிறுகல்
விழுந்தது போல்...
கண நேரமும்
உன் முகம்...
என் கண்களை
உறுத்திக் கொண்டே!
இருக்கிறது....💦

🌸இனியவளே!
உன்னை
நேசிக்கத்
தொடங்கியதில் இருந்து
நான்
தலையணையைத்
"தலைக்கு வைத்து"
படுத்ததே! இல்லை....💙

💓 காலையில்
காதலி
கன்னக் காகிதத்தில்
💋உதட்டுப் பேனாவால்
எழுதிய✒
முத்தக் கவிதையை
முக்கால்
இரவு வரை
திருப்பி...திருப்பி
படித்துக் கொண்டே!
இருந்தேன்.....💋

💐பெண்ணே!
நீ மலரானால்
நான்
"வண்ணத்துப்பூச்சியாக
மட்டுமல்ல....
நீ விளக்கானால்
நான்
"விட்டில் பூச்சியாகவும்,"
மாறுவேன்....

❤🧡💛💚💙💜💙❣💕💞

எழுதியவர் : கவிதை ரசிகன் (1-May-20, 8:08 pm)
பார்வை : 51

மேலே