சித்ரகுப்தனும் மக்களும்
சித்ரகுப்தா என்ன அங்கே ஒரே கூட்டமாக இருக்கின்றது...
அதுவா தர்மராஜா..
பூலோகத்திலிருந்து ஒரு லோப் டெக்னீசியன் ரிசல்ட் கொண்டு வந்துருக்கான்...
என்ன ரிசல்ட் அது..?
இவர்களுக்கு கொரோனா பாசிடிவ் இருக்கின்றது.. என்கிற ரிசல்ட்.. தர்மராஜா
என்னது...
இப்போதுதான் ரிசல்ட் வருகிறதா...?
ரிசல்ட் வருவதற்குள் -
நீ ஏன் அவர்கள் கணக்கை முடித்தாய் சித்ரகுப்தா
கொஞ்சநாள் அவர்களை விட்டுவிட வேண்டியது தானே... இன்று மரணத்தின் நிலத்தில் ஒவ்வொருவரும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் - சிறிது காலம் வாழ்வதே அவர்களின் வெற்றியாக இருக்கின்றது...
இதில் நீ வேறு ஏன் அவர்களின் கணக்கை விரைந்து முடித்தாய்..?
தர்மராஜா.. உலகில் பாவங்கள் அதிகரித்துவிட்டன.. அதற்கான பலனை மக்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்...
சித்ரகுப்தா...
இதோ பார் இந்த பிஞ்சு மழலை பிறந்தவுடனே இறந்துவிட்டது...
இது என்ன பாவம் செய்தது...
தர்மராஜா... முன்னோர்கள் செய்த பாவத்தின் விளைவு...
அப்படியென்றால் பாவம் செய்தால் தண்டனை உறுதி... அப்படித்தானே...
அப்படித்தான் தர்மராஜா...
கொலை செய்வது பாவமா...? குற்றமா..?
சித்ரகுப்தா
இதிலென்ன சந்தேகம் தர்மராஜா... முற்றிலும் பாவத்தை தான் சேரும்...
அப்படியென்றால்... நீ என்னிடம் கலந்து ஆலோசிக்காமல்... சீனாக்காரனிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு இத்தனை பேரையும் கொரோனாவால் கொலை செய்து இருக்கிறாய்... அப்படித்தானே..
அப்படியெல்லாம் இல்லை தர்மராஜா
அப்படித்தான் சித்ரகுப்தா...
உன் வங்கி கணக்கில் சீன கரன்சி நோட்டுக்களின் பரிவர்த்தனை நடந்து இருக்கின்றது...
அது முற்றிலும் பொய் தர்மராஜா
அது உண்மைதான் என்பதற்கு என்னிடம் சாட்சி உண்டு சித்ரகுப்தா
எப்படி தர்மராஜா...?
லோப் டெக்னீசியனே இங்கு வா..
நீ கொண்டு வந்த சித்ரகுப்தனின் வங்கி கணக்கு ஆதாரங்களை - சித்ரகுப்தனிடம் காட்டு...
அப்படியே தர்மராஜா...
சித்ரகுப்தா... பார் ஆதாரங்களை...
இன்றிலிருந்து உன் பதவி பறிக்கப்படுகின்றது....
தர்மராஜா என்னை மன்னியுங்கள...
என்னை மன்னியுங்கள்...
சித்ரகுப்தா - மூச்சு முட்டி இறந்த நோயாளிகள் அனைவரும் இப்படித்தானே உன்னிடம் கெஞ்சி இருப்பார்கள்...
குடும்ப உறுப்பினர்களையே மீண்டும் சந்திக்க விடாமல் எல்லோரையும் தவிக்க விட்டாயே... அதற்கான பாவத்தை நீ அனுபவித்து தான் ஆக வேண்டும்...
உன் பதவி பறிக்கப்பட்டுவிட்டது.
அந்த லோப் டெக்னீசியனே..
இனி புது சித்ரகுப்தனாகிறான்...
தர்மராஜா-
நான் மேல்முறையீடு செய்வேன்...
பிரம்மாவையும்-சிவனையும்-விஷ்னுவையும் சந்தித்து மேல்முறையிடுவேன்...
ஹா..ஹ..
ஹா..ஹ..
முட்டாள் சித்ரகுப்தா...
காலையிலேயே அவர்கள் மூவருக்கும் ஓலை அனுப்பிவிட்டேன்...
என்னவென்று...?
'சித்ரகுப்தன் கொரோனா தொற்றால் இறந்துவிட்டான்' யென்று...
அதற்கான பதில் ஓலையும் அவர்களிடமிருந்து வந்துவிட்டது...
'தர்மராஜா அவர்களே-
நாங்கள் மூவரும் வரவில்லை -
நீங்களே சித்ரகுப்தனுடைய இறுதி மரியாதையை செய்துவிடுங்கள் என்று...'
உனக்கு சந்தேகம் இருந்தால் பார் இந்த ஓலையை....
வேண்டாம் தர்மராஜா...
நான் தண்டனையை ஏற்கின்றேன்...
ஆனால் மீண்டும் வடகொரிய அதிபரோடு கம்பீரமாக நடந்துவந்து உங்களை சந்திப்பேன்...
என்னை சந்திப்பது இருக்கட்டும்..
முதலில் நீ வடகொரிய அதிபரை சந்திக்க முடியுமா என்பதை பார்...
யாரங்கே....
சொல்லுங்கள் தர்மராஜா
இந்த பழைய சித்ரகுப்தனை அந்த கொரோனா கிருமி சிறையில்போட்டு கொல்லுங்கள்...
அப்படியே ஆகட்டும் தர்மராஜா
புதிய சித்ரகுப்தா - நீ இங்கு வா...
இனி மக்கள் மரணத்தின் நிலத்தில் வாழ்ந்ததுபோகட்டும்... இனி மகிழ்ச்சியின் நிலத்தில் வாழட்டும்... கணக்கைப் பார்த்து எழுது - குறிப்பாக என்னிடம் கலந்து ஆலோசித்து எழுது...
அப்படியே ஆகட்டும் தர்மராஜா....!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி