அத்தியாயம் 2 என் வாழ்கை விடுகதை
விடையை தேடி விடுகதை முடித்து
அடுத்த தேடல் விடுகதையாய் தொடரும்
வாழ்கை உண்டு அதை நான் சொல்லிட
முயற்சிதான் என் கவிதை
சில நாள் சொர்க்கம் சில நாள் நரகம்
உறக்கம் இன்றி மனம் தனியே திரியும்
வெற்றிகள் குவியும் பரிசுகள் கிடைக்கும்
என்று கனவினில் மிதந்து விடிகையில்
கலையும் கனவும் விடுகதை
இனிபென பழகும் காதலும் ஒரு விஷம்
இனிக்கின்ற ஓர் விஷம் விழிகளில்
தொடங்கி உயிர்வரை கலந்து மூச்சென
மாறும் வேளையில் காற்றாய் வெளி ஏறும்
வெறும் கூடாய் மனம் வாடும்
நம்மை தத்தளிக்க வைக்கும் காதலும்
ஒரு வகை விடுகதை விடை வரும்
மரணம் அதை தொடும் வாழ்வதை விட
சாவது மேல் என்று எண்ணம் தோன்ற
காரணம் காதல் ஓர் ரணம்
பூவெலாம் நட்பின் வாசம் பூத்தது
என்னுள் நேசம் என் எல்லா நாளும்
சொர்க்கமாய் மாறும் நட்பின் நிழலிலே
விடையும் எளிதில் கிடைக்கும்
உன் எடையும் அதிகரிக்கும் நட்பின்
மகிழ்ச்யாலே தாய்மடி காணும் நேரம்
கவலை எல்லாம் பறந்தோடும்
நட்பிலும் தாய் மடி காண முடியும்
என் எல்லா இரவுகளும் நட்பில் விடியும்
மழலை உலகம் நட்பில் தெரியும்
காலம் உருண்டோடுமே தலையில்
நரை காணுமே அப்போதும் நட்புடன்
நட்பு தோள் சாயுமே
அத்தியாயம் தொடரும் விடுகதை வளரும்