தமிழா தமிழா
தமிழா தமிழா .....
நீ யாரோ .....நான் யாரோ.....
நாம் தொப்புள் கோடி அறுந்துவிழுந்த இடம் வேறு வேறு......
நாம் தத்தி தவழ்ந்த இடம் வேறு....
நாம் சுற்றித்திரிந்த களம் வேறு....
நம் கனவுகள் வேறு....
நம் பாதைகள் வேறு...
நான் யாரோ.....நீ யாரோ
இதோ இன்று கூடினோம் .....
களத்தில் குதித்த காளைப்போல .....காளைக்காக !
யாரோ ஒரு களத்து மேட்டுக்காரன் கண்ணிருக்காக ......!
இந்த களம் யுத்தக்களம் ....எதிரிகள் தெரியா மாயக்களம் .....
காற்றுகூட நஞ்சை வீசலாம் ....
காலன் கூட நம் கழுத்தறுக்கலாம் ....
என்னை நீ காப்பாய் .....உன்னை நான்....
நம் இதயத்துடிப்பு உயிரெழுத்து .....
நம் வார்த்தைகள் மெய்எழுத்து ....
எடுக்க வேண்டும் ஆயுதத்தை .....முடிக்கவேண்டும் போர்க்களத்தில் !!
கண் தூக்கம் இல்லாமல் ..... கையோடு கைகோர்த்து போராடினோம் ....
நம் கனவுகள் ஒன்று.....நம் பாதையும் ஒன்று......
நம் ஆணி வேர் ஒன்று.....
தமிழா தமிழா தமிழா......
நீ வேறு....நான் வேறு இல்லை.....
நாம் அனைவரும் தமிழ்த்தாய் பிள்ளை !!!