வாழ்க்கை பயணம்

வாழ்க்கை பயணம் சிகரம் நோக்கி….
போகப்போக…. தூரப் போகும் !

வாழ்க்கை பாதை கடினமாகும்
கண்ணிர் துடைத்து .....
தொடரும் பயணம் .....

பாதை ஒன்று பயணம் நூறு
பயணம் இல்லா பாதை ஏது ...

செல்லும் பாதை சரிதான் என்ற சிந்தை ஒரு புறம் !
எதிரே வேறு பாதைத் தெரிய என்னுள் ஒரு பயம் !

முற்கள்,புதர்கள்,கற்க்கள், பாறைகள் முட்டி மோதியே
முந்தி செல்ல முயன்று தோற்ற காலம் .....சக்கரம்

மாலை வந்தால் . . . . காலை... விடியும் .. . . .
விடியும் காலை .....மாலை சேர்க்கும் ....வெற்றி சக்கரம்!

வீழ்ந்த காலங்கள்…
கடந்த பாதைகள்…
கடந்த மனிதர்கள்…
கடந்த நினைவுகள்…
கடந்த உண்மைகள்…
கடந்த சிகரங்கள்…
சேர்த்த...சேர்ந்த! இப்பொழுது...................ஒரே வினா.....?

நம் பயணம் எதை நோக்கி . . . ?
நிழலாய் போகும் நிஜங்கள் . . .!

இதோ…
வாழ்க்கை பயணம் . . . சிகரம் நோக்கி…
சிகரம் என்ன உன் மனம் சொல்லும்..
பாதை நூறு…. …பயணம் வேறு....!!

எழுதியவர் : Ganesh (3-May-20, 1:27 pm)
சேர்த்தது : Ganesh
Tanglish : vaazhkkai payanam
பார்வை : 342

மேலே