முதலிரவு

இதுதான் முதல் முறை
புது புடவை கட்டி
தலை நிறைய பூச்சூடி
தங்க ஆபாரணங்கள் அணிந்து
ஆசையோடு அலங்கரிகப்பட்ட
தனி அறையில் தனித்து இருந்தேன்...
என்னவனின் வருகைக்காக
வழி மேல் விழி வைத்து
காத்துக் கொண்டிருந்தேன்...!
.
.
இந்நாள் எந்தன் நீண்ட நாள் கனவு
என் காதல் மன்னனை
கரம் பிடித்துவிட்டேன் என்ற சந்தோஷத்தில் நான்
திளைத்திருந்தேன்..!
.
.
இவ்உலகம் உறங்கிய பின்பு
அவனிடம் என்னை
முழுவதுமாய் ஒப்படைக்க
தயார் செய்து கொண்டேன்...
அவனிடம் என்ன சொல்லி
என்னை தருவது என்ற
தயக்கத்திலும் மூழ்கிருந்தேன்...
.
.
மனதில் ஒருவித மயக்கம்!
மன்னவன் என்னை
என்னவெல்லாம் செய்ய போகிறானோ?
என்ற ஆவலும்,
எதிர்பார்ப்பும்,
அளவு கடந்து சென்றது...!
.
.
'காமம்' பற்றி
எண்ணிலடங்கா
ஆசைகள் கொண்டிருந்தேன்...
பலபல கனவுகளும் கண்டிருந்தேன்
அதே நேரம்
கன்னி உடல் தாங்குமா என்ற
கவலையும் ஆட்கொண்டிருந்தேன்..!
.
.
வாழ்க்கை தந்தவன்
காதலோடு வந்தான்
என் அருகில்
காமத்தோடு நெருங்கினான்
என்னுள்
ஆர்வம் ஒரு பக்கம்!
அச்சம் ஒரு பக்கம்!
.
.
அவனை என்
கையில் அள்ளி அணைத்திட
ஆசை வந்தது
இருந்த போதிலும்
ஏதோ இனம்புரியாத உணர்வு ஒன்று
தடுத்து நின்றது!!!
.
.
நாணத்தால் நான் தலை தாழ்த்தி
நின்றிருந்தேன்
என் தலை நிமிர்த்தி
என் கண்களை
தன் காதலால் உற்று நோக்கினான்
அதில்,
சந்தோஷம்!
ஏக்கம்!
தயக்கம்!
தவிப்பு!
பாசம்!
பயம்!
காதல்!
காமம்!
ஆசை!
என அனைத்தும்
ஒன்று சேர்ந்து என்னை
வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதை
உணர்ந்து கொண்டான்!!!
.
.
கொஞ்சம் விலகி நின்று!
உன்னுள்
ஓடும் எண்ணங்கள் யாவும்..
என்னுள்ளும்
ஓடிக் கொண்டிருக்கிறது என்றான்!!!
.
.
அவன் முகத்தை பார்த்தேன்
அன்று தான் தெரிந்து கொண்டேன்
ஆணின் வெட்கமென்பது
மிக அபரிமிதமானது என்று...!
.
.
பின்பு இருவம்
மனம் விட்டு பேசி
இரவை தீர்த்தோம்!!!

என் இதயத்தில்
ஒரு ஓரமாக இருந்தவன்!
அன்றிரவு முதல்
என் இதயமாக மாறினான்!
.
.
ஒருவரை ஒருவர்
முற்றிலுமாய்
புணர்ந்து கொள்ளும்
முதலிரவை விட...
ஒருவரை ஒருவர்
முழுவதுமாய்
புரிந்து கொள்ளும்
முதலிரவு அழகானது..
அற்புதமானது..!

(குறிப்பு: நிச்சயக்கப்பட்ட திருமணம்
செய்த ஆண்களுக்கு...)

பலநாள் பசி என்று
பற்றென்று பாய்ந்து
பெண் எனும் மென்மை பூவை
கசக்கி எரிந்து விடாதீர்கள்..
பாசத்தோடு பேசி பழகி
அவளின் அன்பை பெற்றதும்
பூவின் வாசம் பெறுங்கள்..!
.
.
பெண்ணானவள்
சொந்த மண்..
பெற்றெடுத்த பெற்றோர்..
பிறந்து வளர்ந்த வீடு..
பேணி வளர்த்த தாத்தா பாட்டி..
செல்லம் கொடுத்த சகோதரர்கள்..
பாசம் அளித்த சகோதரிகள்...
நேசம் மிகுந்த நண்பர்கள்..
மேலும் சொந்தங்கள் பந்தங்கள்
இன்னும் பலபல என
அனைத்தையும் விட்டுவிட்டு
உன்னோடு வருகிறாள்
உனக்காக மட்டும் வருகிறாள்
.
.
அவள் உன்னோடும்
உன் குடும்பத்தோடும்
இணைந்து கொள்ள
சில மணி நேரங்கள் ஆகலாம்
சில நாட்கள் ஆகலாம்
ஏன் சில மாதங்கள் கூட ஆகலாம்
அவளின் மனநிலையை
புரிந்து கொண்டு அதன் படி
நடந்து கொள்ளுங்கள்
.
.
அவள் விருப்பப்படி விட்டுவிடு
தவறுகள் உன் மேல் இருந்தபோதிலும்
கொஞ்சம் விட்டு கொடு தப்பில்லை..
எவனுக்கெல்லாமோ விட்டு கொடுத்து போகிறோம்..
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவளுக்காக
நம்மால் இது கூட பண்ணமுடியாதா?
.
.
திருமணத்திற்கு முன்
பெரும்பாலும் நம் நாட்களையெல்லாம்
நண்பர்களுடன் தான் கழித்திருப்போம்
திருமணத்திற்கு பின்
அவளோடு அதிக நேரம் செலவிடுங்கள்
அதற்காக நண்பர்களை விட்டு விலகி
விடுங்கள் என்று சொல்லவில்லை
அவர்களுடன் செலவிடும்
நேரத்தை குறைத்து கொள்ளுங்கள்
என்கிறேன்
உனக்காக வந்தவளை ஒத்தையில்
உக்கார வைத்துவிட்டு
நாம் நண்பர்களோடு
அரட்டைகள் அடிப்பது நியாயமா?
.
.
புதிதாய் திருமணம் ஆண் பற்றி
சமூகம் சொல்லும்
சில விஷயங்கள் இதோ
வீட்டை விட்டு வெளியில் வரமால்
எந்நேரமும் அதே பொழப்பில் உள்ளான்
என்பார்கள் இல்லையென்றால்
கட்டுன பொண்டாட்டியின்
கால் அடியில் கிடக்கும்
பொண்டாட்டிதாசன் என்பார்கள்...!
.
.
பைத்தியக்காரர்கள் எப்பவுமே
உளரிக் கொண்டுதான் இருப்பார்கள்
இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாதே!
.
.
உலகம் ஆயிரம் சொல்லும்
அவற்றை எல்லாம்
காதில் போட்டுக் கொள்ளாதே!!!

அன்போடு அவளுடன் இருந்து கொள்!
அக்கரையோடு அவளை
பார்த்துக் கொள்!
காலமெல்லாம் அவளோடு
காதலுடன் வாழ்ந்து கொள்!!!
.
.
மேலே சொன்ன சில தகவல்களில்
பிழை இருந்தால்
மன்னித்துக் கொள்ளவும்😊
.
.
நன்றி! நன்றி! நன்றி!
.
.
.
கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:23 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : muthaliravu
பார்வை : 7653

மேலே