யாதுமாகி

நீ
எட்டுச் சுவை
பட்டுத் தமிழோ ?
இல்லை
சொட்டும் தேன்
கொட்டும் கவியோ ?

நீ
நேசம் தரும்
ஆசைக் கிளியோ ?
இல்லை
வாசம் மிகு
பூசை மலரோ ?

நீ ஒரு
பின்னல் அணி
மின்னல் சுடரோ ?
இல்லை
கன்னல் சுவை
வண்ணத் தமிழோ ?

நான்
நாடும் குயில்
பாடும் ஒலியோ ?
இல்லை
ஆடும் முகில்
தேடும் நிலவோ ?

நேசப்
பூங்குயிலும் நீயோ?
இல்லை
வாசப்
பூ மலரும் நீயோ ?

வாவிச்
செங்கமலம் நீயோ ?
இல்லை
தாவும்
செங்கயலும் நீயோ ?

புவிப்
பரப்பில் யாதும் நீயே !
ஆம் என்
கவிப்
புனைவில் யாதும் நீயே !

ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்

எழுதியவர் : ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன (3-May-20, 1:46 pm)
சேர்த்தது : Sridharan Venkatakrishnan
Tanglish : yathumaagi
பார்வை : 99

மேலே