மலர் ரோஜாக்களாகவும் மௌன சொல் முத்தங்களாகவும்

உன்னை நினைத்து சில சொற்களை நான் ஏந்திச் சென்ற போது
நெஞ்சம் ஒரு கவிதைப் புத்தகமாக விரிந்தது
புத்தகத்தின் பக்கங்களை நான் திருப்பிய போது
அது மலர் ரோஜாக்களாகவும் மௌன சொல் முத்தங்களாகவும் நிறைந்து கிடந்தது
இந்த புத்தகத்தின் பக்கங்களை எவன் மூடி வைக்கிறானோ அவன்
அந்தியின் மெல்லிய சிறிதான தருணத்தை அறியாதவன் !