காக்கா

கா கா கா ..... என்று
அதிகாலையிலே முற்றத்தின் மீது
அமர்ந்து கரையும் காகமே
தூக்கத்திலிருக்கும் என்னை எழுப்பி
'உழவனே நீ தூங்கிவிட்டால்
உழுவதில் பாதிப்பு
உழுவதில் பாதிப்பு விளையும்
பயிர் தரும் விளைச்சலில் ....ஆக
உலகத்திற்கே சோறு போடுபவன் நீ
எழுந்திரு பணிக்கு விரைந்திடு என்பதுபோல்
நீ கரைகின்றாய் காகமே ...


கா கா கா என்று நீ இரைகின்றாய்
அதையே பண்ணமைத்து பாடுகிறான்
இங்கே திரைப்படத்தில் ஒருவன்
உன் இரைச்சலும் இசையாகின்றதே அங்கே

'காக்கை குருவி எந்தன் ஜாதி என்று
உன்னைத் தன்னோடு சேர்த்துக்கொண்டான்
மஹாகவி பாரதி .... பின்னே அவனே
உன் கருமை சிறகில் இறைவனையும் கண்டான்

கா கா வென்று நீ இறைவதேனோ காகமே
அறியலாமா....

ஓ ஒற்றுமையின் உறைவிடமே
நீ இந்த மக்களை கா வென்று
இறைவனிடம் வேண்டுகிறாயோ
உன் மொழியில் இறைவனை ..

உன்னைப்போல் இருக்கும் குயிலுக்கு
நீ உறவு சேர்த்து அடைக்கலமும் தந்து
உன் கூட்டிலேயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-May-20, 6:04 pm)
Tanglish : kaakkaa
பார்வை : 51

மேலே