உயிர்

வெட்டிவைத்த
பிரும்ம விருட்சக்கொம்பு
துளிர்விடும்
வெட்டினாலும்
ஒவ்வொரு துண்டும்
ஒவ்வொரு புழுக்களாகும் மண்புழு
பறவைகளின் எச்சத்தால்
மலை இடுக்குகளில்
முளைக்கும் அரசன்
பெண்ணின் கன்னிக் குடத்தில்
வளரும் சிசுப்போல்
இவைகளும் உயிரே
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-May-20, 6:28 am)
Tanglish : uyir
பார்வை : 163

மேலே