இறை படைப்பின் ஆக்கமும் அழிவும்

மனிதன் இயற்கையை ஆட்கொண்டு இன்புற்றக் காலம் அன்று...

இயற்கைய தான் இழந்த வளங்களை மீட்க பேரிடர்களாக உருவெடுக்கும் காலம் இன்று....


மனிதன் தன் புதுமையின் ஆற்றலால் பழமையை வென்ற காலம் அன்று ‌‌...

இயற்கையின் இன்னல்களால், மனிதன் பழமையை தேடும் காலம் இன்று....


மனிதன் தன் அறிவியல் குணத்தால் இயற்கையை‌ சூறையாடிய காலம் அன்று...

இயற்கையின் அடங்கா குணத்தால் அறிவியலையும் நிலைகுலைய வைத்த காலம் இன்று.....

மனிதன் தன் இதயத்துடிப்பினை மட்டும் உற்று நோக்கிய காலம் அன்று...

இயற்கை தன் இதயத்துடிப்பினை உலகிற்கே உணர்த்திய காலம் இன்று....


மனிதனின் ஆறறிவின் அகந்தையால் எதையும் சாதிக்கலாம் என எண்ணிய காலம் அன்று...

இயற்கையின் ஓரறிவு உயிர்களான மண், நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ஆகியவற்றுடன் மனிதனின் ஆறறிவு நிகரற்றது என்று பேரழிவுகள் மூலம் உலகிற்கே தன்னிலையை உணர்த்திய காலம் இன்று ‌.....


"இயற்கையுடன் இயைந்தால் இன்னலற்று இன்புறலாம் என்றும் எவ்வுலகும்"

எழுதியவர் : யுவராஜ்(yuvi) (6-May-20, 11:51 am)
சேர்த்தது : யுவராஜ்
பார்வை : 107

மேலே